கீழ்பவானி வாய்க்காலில் 2000 ஆண்டு ரகசியம்!
24 Sept 2026, 11:18 pm

கீழ்பவானி வாய்க்காலில் 2000 ஆண்டு ரகசியம்!

ஈரோடு, செப்.24-சத்தியமங்கலம் அருகே கீழ்பவானி வாய்க்காலில் சிதிலமடைந்த நிலையில் ஈமத்தாழிகள், மண் பானைகள், மண் குவளைகள், கல் பதுக்கைகள் மற்றும் கல் திட்டைகள் காணப்படுவதால் தொல்லியல் துறை ஆய்வு நடத்தவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உக்கரம் கிராமத்தில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் குள்ள பாண்டியர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரம்உள்ளதாக கருதிய அப்பகுதியை சேர்ந்தவர், தொல் மரபு ஆய்வு சங்கத்தி

னருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து தொல்லியல் மற்றும் கல்வெட்டு பயிற்றுநர்கள் பவுசியா இக்பால்,முத்துக்கண்ணன், வரலாற்று ஆய்வாளர் ராஜசேகர் ஆகியோர் அடங்கிய குழுவினர் அப்பகுதிக்கு சென்று களஆய்வு மேற்கொண்டனர். அப்போதுகீழ்பவானி வாய்க்காலில் தொல்மாந்தர்களின் ஈமக்காடு இருந்ததை கண்டு ஆச்சரியமடைந்தனர்.

இதுகுறித்து கள ஆய்வு மேற்கொண்ட குழுவினர் கூறுகையில், சத்தியமங்கலம் வட்டத்தில் அமைந்துள்ள உக்கரம் கிராமத்தில் இதுவரை கண்டறியப்படாத 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட, பழமையான தொல்மாந்தர்களின் ஈமக்காடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கற்காலத்தில் வாழ்ந்த தொல்மாந்தர்கள் இறந்தவரின் உடலை அல்லது எலும்புகளை ஈமத்தாழிகளில் வைத்து மண்ணுக்குள் புதைத்து, அவ்விடத்தை பெரிய பெரிய கற்களை கொண்டு அடையாளப்படுத்துவது வழக்கம். இந்த அமைப்பிற்கு பெருங்கற்படை என்று பெயர். இப்பெருங்கற்படை அமைப்பு கல்திட்டை, கற்பதுக்கை, கல்வட்டம், கற்குவை, மண்குடுவை, நெடுங்கல், தொப்பிக்கல் என்றுபலவகைப்படும். இந்த பெருங்கற்காலஈமச்சின்னங்களில் ஒன்றான கல்திட்டையும், கல்பதுக்கையும் சிறிய வீடு போன்றஅமைப்பில் இருப்பதால் இதனை பொதுமக்கள் குள்ளபாண்டியர் வீடு, குள்ள மனிதர்கள் வாழ்ந்த இடம் என்று கூறுவது வழக்கம். ஆனால், உண்மையில் மாண்டவர் குழிகள் தான் பாண்டவர் குழிகள் என்று மருவி, குள்ளபாண்டியர் வீடு என்று வழக்கத்திற்கு வந்துள்ளது.

இவ்வாறான, ‘குள்ளபாண்டியர்கள் வீடு அமைந்துள்ளது’ என்று கூறப்பட்ட, உக்கரம் கிராமத்தில் அமைந்துள்ள வாய்க்காலின் கரையில் உற்றுநோக்கி ஆராய்ந்த போது, இங்கு பெருங்கற்படை அமைப்பில் ஒன்றான கல்பதுக்கைகள் இருந்தது. மண்ணுக்குள் வைத்து புதைக்கப்படும் ஈமத்தாழியை சுற்றிலும் கற்களை வைத்து ஒருபெட்டி போன்ற அமைப்பை உருவாக்குவார்கள். இதன் பெரும்பகுதி மண்ணுக்குள் புதைந்தும், மேற்பகுதி மட்டும் தரையின் மேலும் தெரியுமாறு இருக்கும்.

இவ்வாறான பத்திற்கும் மேற்பட்ட கல்பதுக்கைகள் இங்கு உள்ளன. மேலும், இங்கு மேற்புற களஆய்வில் ஏழுக்கும் மேற்பட்ட ஈமத்தாழிகள் சிதிலமடைந்தநிலையில் மண்ணுக்கு மேலே தெரிவதை உறுதிப்படுத்தப்பட்டது. இந்த சிதிலமடைந்த தாழிகளுக்கு அருகில்சொரசொரப்பான மற்றும் வழவழப்பான பானை ஓடுகளும், கருப்பு, சிவப்பு நிறமுடைய ஏராளமான பானை ஓடுகளும் கிடைக்கின்றன. இவற்றுடன் சிறியபானைகளும், மண் குவளைகளும் காணப்படுகின்றன. மேற்குத்தொடர்ச்சி மலைக்கு அருகில் அமைந்துள்ள இக்கிராமத்தில் வாழ்ந்த தொல்மாந்தர்கள்வனவிலங்குகளை வேட்டையாடிய வேட்டையாடிகளாக இருந்திருப்பார்கள் என்பதற்கு ஆதாரமாக, நுண்கற்காலத்தை சேர்ந்த கல் ஆயுதங்களும், உலோக பயன்பாடும் இருந்திருக்கும் என்பதற்கு ஆதாரமாக இரும்பு கசடுகளும் இங்கு அதிகளவில் கிடைக்கின்றன.

இப்பகுதியை சுற்றியுள்ள கடம்பூர், தெங்குமரஹாடா, தாளவாடி போன்ற மலைப்பகுதிகளில் பெருங்கற்கால சின்

னங்கள் ஏராளமாக இருப்பதை அறியமுடிகின்றது. மேலும், சேர மன்னர் ரவிக்கோதை காலத்தை சேர்ந்த அத்திக்

கோசத்தார் கல்வெட்டும் கிடைப்பதிலிருந்து இப்பகுதியில் மக்களுக்கு கற்காலம் முதலே தொடர்ச்சியான வரலாறுஇருப்பதை அறிந்துகொள்ள முடிக்கின்றது. கொடுமணலில் கண்டறியப்பட்ட ஈமக்காட்டில் இதுபோன்ற கல்பதுக்கைகளும், கல்வட்டமும், நெடுங்கல்லும் இருப்பதை ஆய்வுசெய்து, அப்பகுதியில் தொல்மாந்தர்கள் கிமு 300க்கும் முற்பட்ட காலத்தில் வாழ்ந்தனர் என்ற உண்மையை போதிய ஆதாரத்துடன் நிரூபித்து இருப்பது போல, இப்பகுதியையும் தொல்லியல் துறை கவனத்தில்கொண்டு ஆய்வு மேற்கொண்டால் பல அரிய வரலாற்றுத் தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. வாய்க்காலின் கரையோரத்தில் அமைந்திருக்கும் இந்த ஈமக்காடு பற்றிய புரிதலும், போதிய பாதுகாப்பும் இல்லாத காரணத்தால், இந்த அரிய வரலாற்று சின்னம் பாதிசிதிலமடைந்த நிலையில் இருப்பதைக் காணமுடிகின்றது. மாநில, ஒன்றிய அரசின் தொல்லியல் துறையும் இப்பகுதியில் முழுமையான கள ஆய்வு மேற்கொண்டு நீண்ட வரலாற்றைக்கொண்டஇந்த தொல்லியல் களத்தை, மேலும் சிதைவுக்குட்படுத்தாமல் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.