குளித்தலை அருகே 2000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு!
20 Jun 2026, 12:34 pm

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே 2,000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே சிவாயம் ஊராட்சி வேளாங்காட்டுப்பட்டியில் ஆறுமுகம் என்ற விவசாயிக்கு சொந்தமான 22 சென்ட் விவசாய நிலத்தில் கற்களை அகற்றும்போது பள்ளம் ஏற்பட்டது. இது குறித்து, கிராம நிர்வாக அலுவலர் நல்லுசாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பின்னர் இயந்திர உதவியுடன் கற்களை அகற்றும் பணியில் ஆறுமுகம் ஈடுபட்டார். அப்போது, பள்ளத்தில் 4 அடி உயரமும் ஒன்னறை அடி அகல வாய்ப்பகுதியும், 3 அடி நடுப்பகுதியும் உள்ள பெரிய மண் பானை வடிவிலான 2,000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, தாழியை கைப்பற்றிய வருவாய்த்துறையினர் தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.