தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

2,000 ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு

8 Jun 2026, 10:01 pm
2,000 ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு

2,000 ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு

மதுரை, ஜூன் 8- மதுரை மாவட்டம் மேலூர் தாலு காவிற்கு உட்பட்ட கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் உள்ள பூதமங்கலம் ஊராட்சியின் மணியம்பட்டி கிரா மத்தில் அமைந்துள்ள ஸ்ரீ இடையன் கருப்பர் கோவில் அருகே சுமார் 2,000 ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி கண்டறியப்பட்டுள்ளது.

இந்த தாழியுடன் கருப்பு-சிவப்பு நிறத்திலான இரண்டு சிறிய கிண்ணங்களும், மட்பாண்டங் களின் எச்சங்களும் கண்டெடுக்கப் பட்டுள்ளன.

மேலும், இதே பகுதி யில் இன்னும் வெளிப்படாத இரண்டு தாழிப் பானைகளின் தடயங்களும் நிலத்தின் மேற்பரப்பில் தென்படுவ தாக கூறப்படுகிறது. முதுமக்கள் தாழி என்பது சங்க காலம், அதற்கு முந்தைய காலங்களில் வாழ்ந்த மக்களின் அடக்க முறையுடன் தொடர்புடைய முக்கியமான தொல்பொருள் சின்னமாகக் கருதப்படு கிறது.

இறந்தவர்களின் எலும்புகள் அல்லது சாம்பலை பெரிய மண்பானை களில் வைத்து புதைக்கும் வழக்கம் அக்காலத்தில் இருந்ததாக தொல்லி யல் ஆய்வாளர்கள் குறிப்பிடு கின்றனர்.

இத்தகைய தாழிகளு டன் மண்பாண்டங்கள், இரும்புப் பொருட்கள், மணிகள் உள்ளிட்ட பொருட்களும் புதைக்கப்பட்டி ருந்ததற்கான சான்றுகள் பல்வேறு அகழாய்வுகளில் கிடைத்துள்ளன. பழந்தமிழர்களின் வாழ்க்கை முறை, இறப்பு சடங்குகள், சமூக அமைப்பு மற்றும் பண்பாட்டு மரபு களை அறிந்து கொள்ள முதுமக்கள் தாழிகள் முக்கியமான தொல்பொருள் ஆதாரங்களாக விளங்குகின்றன.

மதுரை மாவட்டத்தில் இதுவரை 21 இடங்களில் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், மணியம்பட்டியில் கண்டறியப்பட்டுள்ள இந்த புதிய தொல்பொருள் சான்றுகள் வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் தொல்லியல் ஆர்வலர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியில் விரிவான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.