ஜன.12 முதல் ஜன.14 வரை திருப்பூரில் இருந்து 2000 சிறப்பு பேருந்துகள்
10 Jan 2026, 2:48 pm
<p><strong>ஜன.12 முதல் ஜன.14 வரை திருப்பூரில் இருந்து 2000 சிறப்பு பேருந்துகள்</strong></p>
<p>திருப்பூர், ஜன.10- பொங்கல் பண்டிகையை முன் னிட்டு, திருப்பூர் பேருந்து நிலையங் களில் இருந்து ஜனவரி 12 ஆம் தேதி முதல் ஜன.14 வரை சுமார் 2 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள் ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை ஜன.15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை யொட்டி, திருப்பூரில் பணியாற்றி வரும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த தொழி லாளர்கள் தங்களது சொந்த ஊர்க ளுக்கு செல்லும் வகையில் ஜன.12 ஆம் தேதி முதல் ஜனவரி 14 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள் ளன. திருப்பூர் மத்திய பேருந்து நிலையத் தில் இருந்து சேலம், திருவண்ணாம லைக்கு 510 பேருந்துகள், கோவில்வழி பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, தேனி, திருச்செந்தூர், திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட தென் மாவட் டங்களுக்கு 895 பேருந்துகள், புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், புதுக் கோட்டை, மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு 396 பேருந்து கள் என சுமார் 2,000 பேருந்துகள் இயக் கப்பட உள்ளன. இந்த சிறப்புப் பேருந் துகள் ஜன 12 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை இயக்கப்படும். மேலும், பய ணிகள் வசதிக்காக திருப்பூரில் இருந்து சென்னை, நாகர்கோவில், திருநெல் வேலி, திருச்செந்தூர், திருவண்ணா மலை, கும்பகோணம், தஞ்சாவூர் பகுதி களுக்குச் செல்ல பேருந்துகளில் முன்ப திவு செய்யும் வசதியும் உள்ளது. மத்திய பேருந்து நிலையத்தில் செயல்படும் முன்பதிவு மையத்தில் பயணிகள் தங்க ளது இருக்கைகளை உறுதி செய்து கொள்ளலாம். முன்பதிவில்லா சிறப்பு பேருந்துகளில் வழக்கமான கட்ட ணங்கள் மட்டுமே வசூலிக்கப்படும். சிறப்புப் பேருந்துகளை கண்கா ணிக்க போக்குவரத்துக் கழக அலுவ லர்கள், பணியாளர்கள் அடங்கிய 48 பேர் கொண்ட இயக்க மற்றும் கண்கா ணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது என அரசு போக்குவரத்துக் கழக அலு வலர்கள் தெரிவித்துள்ளனர்.</p>
