தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

எடமலைப்பட்டி புதூர் பகுதியில் ரூ.2,000 கோடியில் பிரம்மாண்ட வளர்ச்சி

8 Apr 2026, 5:30 am
எடமலைப்பட்டி புதூர் பகுதியில் ரூ.2,000 கோடியில் பிரம்மாண்ட வளர்ச்சி

எடமலைப்பட்டி புதூர் பகுதியில் ரூ.2,000 கோடியில் பிரம்மாண்ட வளர்ச்சி

வாக்கு சேகரிப்பின் போது அமைச்சர் கே.என். நேரு பெருமிதம்! திருச்சிராப்பள்ளி, ஏப். 7: திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும், திமுக முதன்மைச் செயலாளருமான அமைச்சர் கே.என்.நேரு, செவ்வாயன்று எடமலைப்பட்டி புதூர் பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பொதுமக்கள் அவருக்கு மாலை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். வாக்கு சேகரிப்பின் போது அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: எடமலைப்பட்டி புதூர் பகுதி கடந்த சில ஆண்டுகளில் அரச வளர்ச்சியைப் பெற்றுள்ளது. தில்லை நகர் மற்றும் பெரிய கடைவீதிக்கு இணையாக இப்பகுதியை மேம்படுத்த சுமார் 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக, அனைத்து சாலைகளும் தரமான சிமெண்ட் சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன. 100 ஏக்கர் பரப்பளவில் பஞ்சப்பூர் கொள்ளையிடப்படும் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டதால், இப்பகுதியில் நிலவி வந்த வெள்ள அபாயம் முழுமையாக நீங்கியுள்ளது. மேலும், குமுளிமுட்டியிலிருந்து கலைஞர் பேருந்து முனைய வரை கோரையாற்றின் கரையில் 40 அடி அகல புதிய சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

இதுபகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான வீட்டு மனைப் பட்டாக்கள் 1,000-க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளன. 20 கோடி ரூபாய் செலவில் மாநகராட்சி பள்ளி தரம் உயர்த்தப்பட்டுள்ளதுடன், ஐடி பார்க் மற்றும் நவீன மாநகர வசதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வளர்ச்சிப் பணிகள் தடையின்றித் தொடர உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.