தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

என்சிபிஐ என்ற சிறிய கட்சியில் இணைந்த 20 திரிணாமுல் எம்.பி.,க்கள்

15 Jun 2026, 9:09 pm
என்சிபிஐ என்ற சிறிய கட்சியில் இணைந்த  20 திரிணாமுல் எம்.பி.,க்கள்

என்சிபிஐ என்ற சிறிய கட்சியில் இணைந்த 20 திரிணாமுல் எம்.பி.,க்கள்

சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் திரி ணாமுல் காங்கிரஸ் கட்சியில் குழப்பம் நீடித்து வருகிறது. எம்எல்ஏக்கள், எம்.பி.,க்கள் 2 பிரிவாக உள்ளனர். சில எம்.பி.,க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டனர்.

இந்நிலையில், கட்சியை விட்டு வெளியேறிய 20 திரிணாமுல் எம்.பி.,க்கள் (மக்களவை) மேற்கு வங்கம், திரிபுராவில் (சில இடங்களில் அமைப்பு போன்று) இருக்கும் சிறிய பிராந்திய கட்சியான என்சிபிஐ-யில் (இந்திய தேசிய வாத குடிமக்கள் கட்சி) இணைந்துள்ள னர். இதற்கான கடிதத்தை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் திங்க ளன்று 20 எம்.பி.,க்களும் நேரில் அளித்தனர்.

என்சிபிஐ (NCPI) என்ற அதிகம் அறி யப்படாத சிறிய கட்சி ஆகும். ஆனால் ‘கட்சித் தாவல் தடைச் சட்டத்தில்’ இருந்து தப்பிக்கவே திரிணாமுல் எம்.பி.,க்கள் என்சிபிஐ-யில் இணைந்துள்ளனர். அரசி யலமைப்பு 10ஆவது அட்டவணையின் படி, ஒரு கட்சியின் எம்பிக்கள் தனியாகப் பிரிந்து சென்றால் அவர்களின் எம்.பி., பதவி பறிபோய்விடும். ஆனால், இதில் ஒரு விதிவிலக்கு உள்ளது. கட்சியின் மொத்த எம்பிக்களில் மூன்றில் இரண்டு பங்கு (2/3) எம்பிக்கள் ஒன்றாகப் பிரிந்து சென்று, வேறொரு அரசியல் கட்சியுடன் தங்களை இணைத்துக் கொண்டால், அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயாது; அவர்களின் பதவியும் தப்பும். இதற்காகவே, மம்தா பானர்ஜி க்கு எதிராகப் பிரிந்த 20 அதிருப்தி எம்.பி.,க்களும் தங்களின் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள இந்த என்சிபிஐ கட்சியைப் பயன்படுத்தியுள்ளனர்.

8 எம்.பி.,க்கள் மட்டுமே 2

024 மக்களவைத் தேர்தலில் திரிணா முல் காங்கிரஸ் 29 இடங்களில் வெற்றி பெற்றது. பசிர்ஹாட் தொகுதி எம்.பி., ஹாஜி ஷேக் நூருல் இஸ்லாம் செப்டம்பர் 2024இல் காலமானதைத் தொடர்ந்து, அவையில் கட்சியின் பலம் 28 ஆகக் குறைந்தது. இதில் 20 பேர் என்சிபிஐ-யில் இணைந்துவிட்டனர். மீதம் அபி ஷேக் பானர்ஜி, கல்யாண் பானர்ஜி, சவுகதா ராய், மஹுவா மொய்த்ரா, கீர்த்தி ஆசாத், சத்ருகன் சின்கா, பிரதிமா மொண்டல், சஜ்தா அகமது ஆகியோர் மட்டுமே உள்ளனர். மம்தா பானர்ஜியின் வலது கரமாக கருதப்படும் சயானி கோஷும் என்சிபிஐ-யில் இணைந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.