முந்தய பக்கம்

90 அடி “ஸ்கை டைனிங்கில்” சிக்கிய 20 பேர் மீட்பு

21 Jan 2026, 3:58 pm
90 அடி “ஸ்கை டைனிங்கில்” சிக்கிய 20 பேர் மீட்பு
<p><strong>90 அடி &ldquo;ஸ்கை டைனிங்கில்&rdquo; சிக்கிய 20 பேர் மீட்பு</strong></p> <p>கோவை, ஜன.21- கொடிசியாவில் தனியார் பொருட்காட்சி யில் உள்ள 90 அடி &ldquo;ஸ்கை டைனிங்கில்&rdquo; சிக்கிய 20 பேரை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி பத்திரமாக மீட்டனர். கோவை கொடிசியா வளாகத்தில் தனி யார் நிறுவனம் சார்பில் ஒண்டர்பால்ஸ் என்ற &nbsp;பொருட்காட்சி போடப்பட்டுள்ளது. இங்கு &nbsp;செயற்கை நீர் வீழ்ச்சி, ராட்சச ராட்டினம், ஸ்கை டைனிங் உள்ளிட்ட பொழுதுபோக்கு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், செவ்வாயன்று இரவு 90 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த ஸ்கை டைனிங்கில் வழக்கல் போல பொதுமக்கள் ஏறி உணவு அருந்தினர். பின்னர் மீண்டும் கீழே இறக்க முயன்ற போது, இயந்திரம் பழு தாகி நின்றது. இதனால் மேலே சிக்கிய குழந்தைகள் உட்பட 20 பேர் இறங்க முடியா மல் தவித்துள்ளனர். நீண்ட நேரம் போராடி யும் இயந்திரம் சரி ஆகாததால், உடனடியாக அங்கிருந்தவர்கள் பீளமேடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த நிலைய அலுவலர் பால சுப்பிரமணியன் தலைமையிலான தீய ணைப்பு துறையினர், ஸ்கை லிப்ட் மூலம் 90 அடி உயரத்தில் சிக்கிய குழந்தைகள் உட்பட 20 பேரை பத்திரமாக மீட்டனர். சுமார் 4 முறை இயந்திரம் இயக்கப்பட்டு தலா 5 பேராக மீட்கப்பட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram