20 திரிணாமுல் எம்.பி.,க்கள் என்டிஏ கூட்டணிக்கு ஆதரவு மக்களவை சபாநாயகருக்கு கடிதம்
8 Jun 2026, 8:47 pm

20 திரிணாமுல் எம்.பி.,க்கள் என்டிஏ கூட்டணிக்கு ஆதரவு மக்களவை சபாநாயகருக்கு கடிதம்

சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் ரித்தப்ரதா பானர்ஜி 60 எம்எல்ஏக்கள், 20 எம்.பி.,க்களை பாஜக ஆதரவுடன் வளைத்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை இரண்டாக உடைத்துள்ளார். மேலும் எனது ஆதரவில் இருக்கும் எம்எல்ஏக்கள், எம்.பி.,க்களே உண்மையான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் என ரித்தப்ரதா பானர்ஜி கூறி வருகிறார்.

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரித்தப்ரதா பானர்ஜி ஆதரவு 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாஜக தலைமையி லான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய விரும்புவதாக மக்களவை சபாநாயகருக்குக் கடிதம் எழுதி யுள்ளனர்.

அக்கடிதத்தில்,“நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) இணைய விரும்புகிறோம். திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி (மம்தா பானர்ஜி மருமகன்) தலைமையிலான அணியு டனான உறவை முறித்துக் கொள்ள விரும்புகிறோம்” என அதில் தெரிவித் துள்ளனர்.

பாஜக அமைச்சரின் வீட்டில்

திரிணாமுல் கட்சிக்கு மொத்தம் 28 மக்களவை உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 8 பேர் மட்டுமே மம்தா பானர்ஜியுடன் உள்ளனர். என்டிஏ கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ள 20 பேர் தில்லியின் அடையாளம் தெரியாத ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதாவது ஒன்றிய அமைச்சரும், பாஜக தலைவரு மான பூபேந்தர் யாதவின் இல்லத்திற்குச் சென்றுள்ளதாகவும், மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரியும் அங்கு சென்று சேர்ந்துள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.