பேருந்தும் வேனும் மோதி 2 பெண்கள் பலி; 11 பேர் படுகாயம்
1 Dec 2025, 5:20 pm
<p><strong>பேருந்தும் வேனும் மோதி 2 பெண்கள் பலி; 11 பேர் படுகாயம்</strong></p>
<p>கல்பாக்கம், டிச.1- செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், கிழக்கு கடற்கரை சாலையில் குன்னத்தூர் கிராமத்தில் திங்கள்கிழமை (டிச.1) காலை நடந்த சாலை விபத்தில் இரண்டு பெண்கள் பலியாயினர்; 11 பேர் படுகாயம் அடைந்தனர். சென்னையிலிருந்து புதுச்சேரி நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தும், கூவத்தூர் அடுத்த கீழார்கொள்ளை கிராமத்திலிருந்து ஆலந்தூரில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த உமா (40) மற்றும் பானு (24) ஆகிய இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 11 பேர் மீட்கப்பட்டு செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனை, பூஞ்சேரி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். சதுரங்கம் பட்டினம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதல்வர் நிவாரண அறிவிப்பு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலைத் தெரி வித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தின ருக்குத் தலா ரூ.3 லட்சம், பலத்த காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ.1லட்சம், லேசான காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ.50,000 முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார். தங்கம் விலை தொடர்ந்து உயர்வு சென்னை, டிச.1- சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.96,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.90 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.12,070-க்கு விற்பனை செய்யப் பட்டது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.4-ம், கிலோவுக்கு ரூ.4 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.196-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 96 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப் பட்டது.</p>
