முந்தய பக்கம்

முறைகேடாக நெல் மூட்டைகள் ஏற்றி வந்த 2 லாரிகள் பறிமுதல்

20 Feb 2026, 2:39 pm
முறைகேடாக  நெல் மூட்டைகள் ஏற்றி வந்த  2 லாரிகள் பறிமுதல்
<p><strong>முறைகேடாக &nbsp;நெல் மூட்டைகள் ஏற்றி வந்த &nbsp;2 லாரிகள் பறிமுதல்</strong></p> <p>தஞ்சாவூர், பிப்.20- &nbsp;தஞ்சாவூர் அருகே, முறைகேடாக நெல் மூட்டைகள் ஏற்றிச் சென்ற 2 லாரிகளை அலுவலர்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழ் சம்பா கொள்முதல் பருவத்தில், விவசாயிகளுக்காக 609 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையங்களில் விவசாயி அல்லாத நபர்களின் நெல் விற்பனை செய்வதைத் தடுப்பதற்காக, அலுவலர்கள் கொண்ட ஆய்வுக் குழுக்களை மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் சில வாரங்களுக்கு முன்பு அமைத்தார். இந்நிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத் துணை மேலாளர் டி. இளங்கோவன் தலைமையிலான குழுவினர் தஞ்சாவூர் அருகே புலவர்நத்தம் பகுதியில் வியாழக்கிழமை ஆய்வு செய்தார். &nbsp;அப்போது, திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்துக்கு, தகுந்த ஆவணங்கள் இல்லாமல் 450 நெல் மூட்டைகள் ஏற்றிச் செல்லப்பட்ட லாரியை மூட்டைகளுடன் பறிமுதல் செய்து, அம்மன்பேட்டை நவீன அரிசி ஆலைக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல், மாரியம்மன் கோவில் அருகே புளியந்தோப்பு பகுதியில் வியாழனன்று முறையான ஆவணங்கள் இல்லாமல் 200 நெல் மூட்டைகள் ஏற்றி வந்த லாரியையும் பறிமுதல் செய்து, அம்மன்பேட்டை நவீன அரிசி ஆலைக்கு அனுப்பி, நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. &nbsp;வியாபாரிகளிடமிருந்து முறைகேடாக நெல் மூட்டைகள் வருவது கண்டுபிடிக்கப்பட்டால், சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram