ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம், வெள்ளி விலை!
10 Nov 2025, 12:54 pm
<p>தங்கம் விலை இன்று ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.<br />
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் காலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்த நிலையில் தற்போது 2ஆவது முறையாக ரூ.560உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,840க்கு விற்பனையாகிறது. <br />
வெள்ளி இன்று காலை கிராமுக்கு ரூ. 2 உயர்ந்த நிலையில் தற்போது மீண்டும் ரூ.2 உயர்ந்து ரூ.169க்கு விற்பனையாகிறது.</p>
