தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

1 Apr 2026, 4:02 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

ஆற்றில் மூழ்கிய 2 மாணவர்கள் உயிரிழப்பு

மேட்டுப்பாளையம், ஏப்.1- மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் மூழ்கி உயிரி ழந்த இரண்டு மாணவர்களின் சடலங்களை தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் மீட்டனர். மேட்டுப்பாளையம் கே.கே.நகர் பகுதியை சேர்ந்த கிஷோர்(20), கோவை நல்லாம்பாளையம் தனியார் இன்ஜினி யரிங் கல்லூரியில் பிஇ இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார்.  மேட்டுப்பாளையம் சாந்தி நகர் ஒன்றாம் பாலம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரது மகன் ஆகாஷ்(17). இவர் தனியார்  பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதி முடித்துள் ளார். இந்நிலையில், மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, செவ்வா யன்று அரசு விடுமுறை என்பதால் இவர்கள் இருவரும் தனது  நண்பர்களுடன் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள நெல்லித் துறை விளாமரத்தூர் பவானி ஆற்றில் குளிக்க சென்றுள்ள னர். ஆற்றில் அனைவரும் குளித்து கொண்டிருந்த போது கிஷோர் மற்றும் ஆகாஷ் இருவரும் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக நண்பர்கள் இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு  துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து  சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் தண்ணீரில் மூழ்கிய இரு மாணவர்களையும் செவ் வாயன்று மாலை வரை தேடினர். போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினரின் தேடும் பணியின் போது கிஷோர் மட்டும் சடலமாக மீட்கப்பட்ட நிலை யில், அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஆகாஷை  தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இருட்ட  துவங்கியதால், தற்காலிகமாக தேடும் பணி நிறுத்தி வைக் கப்பட்டது. இதனையடுத்து புதனன்று காலை முதல் மீண்டும் தேடும்  பணி துவங்கியது. அப்போது ஆற்றில் மூழ்கிய மற்றொரு  மாணவனையும் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையி னர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவரது உடலையும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

போக்சோவில் ஒருவர் கைது

ஈரோடு, ஏப்.1- ஈரோட்டில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை  செய்த நபரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், கணேசபுரம், மாதா கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (38). திருமணமான இவர், ஈரோடு மாவட்டம், வீரப்பன்சத்திரம் பகுதியில் தறிப் பட்டறையில் பணியாற்றி வந்தார். அப்போது, அதே பட்டறை யில் கணவரை பிரிந்து இரண்டு மகள்களுடன் வசிக்கும் பெண்  ஒருவரும் பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே, அந்த  பெண் வீட்டிற்கு சுரேஷ்குமார் அடிக்கடி சென்று வந்துள்ளார்.  இந்நிலையில், அப்பெண்ணின் 14 வயது மகளை சுரேஷ் குமார் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமடைந்த நிலையில், இதுகுறித்து ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாயார்  புகாரளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, செவ்வாயன்று சுரேஷ் குமாரை கைது செய்தனர்.

கோழிகள் இறந்த சம்பவம் பறவை காய்ச்சல் காரணமாக

அல்ல நாமக்கல், ஏப்.1- நாமக்கல் தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்க  அலுவலகத்தில் செவ்வாயன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், முட்டை ஏற்றுமதி சங்கச் செயலாளர் சுந்தர்ராஜ் பேசுகையில், ராசிபுரம் பகுதியில் ஒரு பண்ணையில் கோழி கள் இறந்தது குறித்து பரவிய தகவல்கள் தவறானவை. கோடைகாலத்தில் வழக்கமாக கோழி இறப்பு அதிகரிக்கும் நிலையில், அந்த பண்ணையில் குடிநீர் குழாய் அடைப்பு ஏற் பட்டதால், ஒரு பகுதியில் இருந்த கோழிகளுக்கு தண்ணீர்  கிடைக்காமல் போனதே இறப்புக்குக் காரணம்.  பறவை காய்ச்சல் உள்ளிட்ட எந்தவித நோய் தாக்கமும்,  தற்போது இல்லை. கால்நடை பராமரிப்பு துறை மற்றும்  மருத்துவர்களின் ஆலோசனைகளின்படி அனைத்து பண்ணைகளிலும் கிருமிநாசினி தெளிப்பு, பரிசோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், எந்தவித  நோய் பாதிப்பும் இல்லாத காரணத்தால் அயல்நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து, முட்டை ஏற்றுமதியை மேலும் அதி கரிக்கும் வகையில் விமான மார்க்கத்திலும் ஏற்றுமதி செய்ய  திட்டமிடப்பட்டுள்ளது, என்றார்.

பாலியல் அத்துமீறல் குண்டர் சட்டத்தில் ஒருவர் அடைப்பு

ஈரோடு, ஏப்.1- ஈரோடு மாவட்டம், கஸ்பாபேட்டை, நாதகவுண் டம்பாளையம் செக்குமேடு புதுக்காலனியை சேர்ந்தவர் ஜீவானந்தம் (30). இவர், ஈரோட்டை சேர்ந்த 65 வயது  மூதாட்டியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலி யல் வன்கொடுமை செய்ய முயன்றார். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் ஜீவானந்தம் மீது பெண் வன் கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து, ஈரோடு கிளை சிறை யில் அடைத்தனர். இந்நிலை யில், ஜீவானந்தத்தை குண் டர் தடுப்பு காவல் சட்டத்தில்  சிறையில் அடைக்க மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி, ஆட்சியருக்கு பரிந்துரைத்தார். அதனை யேற்ற ஆட்சியர் கந்தசாமி,  ஜீவானந்தத்தை குண்டர்  சட்டத்தில் சிறையில்  அடைக்க உத்தரவிட்டார். அதன்பேரில், ஈரோடு தாலுகா போலீசார் ஜீவானந் தத்தை ஈரோடு கிளை சிறை யிலிருந்து பாதுகாப்புடன் அழைத்து சென்று, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

குழாய் மூலம் எரிவாயு பெற பதிவு செய்ய அறிவுறுத்தல்

ஈரோடு, ஏப்.1- ஈரோட்டில் வசிக்கும் பொதுமக்கள் குழாய் மூலம் எரிவாயு பெற, எரிவாயு நிறு வனங்களில் பதிவு செய்ய வேண்டும் என  மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவுறுத்தி யுள்ளார். எல்பிஜி எரிவாயு பற்றாக்குறையை கருத் தில் கொண்டு, ஒன்றிய அரசு வணிக எல்பிஜி  ஒதுக்கீட்டை தொடக்கத்தில் 20 சதவிகிதமாக  குறைத்தது. இது படிப்படியாக அதிகரிக்கப் பட்டு வணிக வாடிக்கையாளர்கள் 70 சதவிகி தம் வரை பெற தகுதியுடைவர்களாக உள்ள னர். இருந்தாலும், சில நிபந்தனைகளை வாடிக்கையாளர்கள் பூர்த்தி செய்தால் மட்டுமே 70 சதவிகித முழு ஒதுக்கீட்டு பலனை  பெற முடியும். அனைத்து வணிக, தொழில் துறை எல்பிஜி. நுகர்வோரும், கூடுதல் ஒதுக் கீட்டில் இருந்து எல்பிஜியை பெறுவதற்கு தகுதி பெற சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறு வனங்களில் பதிவு செய்ய வேண்டும். மேலும், எல்பிஜி நுகர்வோர், குழாய் வழி  இயற்கை எரிவாயு (பிஎன்ஜி) இணைப்புக ளுக்கு பொருந்தும் வகையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள நகர எரிவாயு விநி யோக நிறுவனங்களில் பதிவு செய்து பெறு வதற்கான தயார் நிலையை வெளிப்படுத்த வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் விருப்ப முள்ள வணிக, தொழில் துறை எல்பிஜி நுகர் வோர், பிஎன்ஜி இணைப்புகளை பெறுவ தற்கு நகர எரிவாயு வினியோக நிறுவனமான  ஈரோடு பி.பி.சி.எல். நிறுவனத்தை 1800224344  என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ச.கந்த சாமி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு – திருவனந்தபுரம் வாராந்திர சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

சேலம், ஏப்.1- பெங்களூரு மற்றும் திருவனந்தபுரம் இடையே சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும்  போத்தனூர் வழியாக இயக்கப்பட்டு வரும்  வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவைக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எஸ்.எம்.வி.டி பெங்களூரு – திருவனந்தபுரம் வடக்கு வாராந்திர சிறப்பு ரயில் (எண். 06547), ஏப்ரல் 1 முதல் மே 27  வரை புதன்கிழமைகளில் இரவு 7.25 மணிக்கு  புறப்பட்டு மறுநாள் மதியம் 1.15 மணிக்கு திரு வனந்தபுரம் சென்றடையும். மறுமார்க்கமாக,  திருவனந்தபுரம் வடக்கு – எஸ்.எம்.வி.டி பெங் களூரு வாராந்திர சிறப்பு ரயில் (எண். 06548),  ஏப்ரல் 2 முதல் மே 28 வரை வியாழக்கிழமை களில் மதியம் 3.15 மணிக்கு புறப்பட்டு மறு நாள் காலை 08.30 மணிக்கு பெங்களூரு  சென்றடையும். இதேபோல், மற்றுமொரு வாராந்திர சிறப்பு ரயிலான எஸ்.எம்.வி.டி பெங்களூரு –  திருவனந்தபுரம் வடக்கு சிறப்பு ரயில் (எண்.  06555), ஏப்ரல் 3 முதல் மே 29 வரை வெள்ளிக் கிழமைகளில் இரவு 10.00 மணிக்கு புறப்பட்டு  மறுநாள் மதியம் 2.00 மணிக்கு திருவனந்த புரம் சென்றடையும். இதற்கான மறுமார்க்க  ரயில் (எண். 06556) ஏப்ரல் 5 முதல் மே 31 வரை  ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 08.15  மணிக்கு பெங்களூரு சென்றடையும் என  சேலம் கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு  அலுவலர் ஜி. மாரியா மைக்கேல் தெரிவித்து ள்ளார்.

வரிகள் தள்ளுபடி திட்டம் ஆறு மாதம் நீடிப்புக்கு ஏஈபிசி வரவேற்பு

திருப்பூர், ஏப்.1- மாநில, ஒன்றிய வரிகள் மற்றும் கட்டணங்கள் தள்ளு படி திட்டம் ஆறு மாத காலம் நீட்டிப்பிற்கு  ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏஈபிசி) நன்றி தெரிவித் துள்ளது. இத்திட்டத்தை ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்க வலியுறுத்தியுள்ளது. ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகமும், ஒட்டு மொத்த ஆடை ஏற்றுமதி சமூகமும் இணைந்து, ஆயத்த ஆடை துறைக்கான மாநில மற்றும் ஒன்றிய வரிகள் மற்றும்  கட்டணங்களுக்கான தள்ளுபடி திட்டத்தை, மார்ச் 31,  2026க்கு பிறகு மேலும் ஆறு மாத காலத்திற்கு நீட்டித்த தற்காக இந்திய அரசுக்கு தனது நன்றியை தெரிவித்துள் ளது. புவி பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் அதி கரித்து வரும் செலவு நிலவும் ஒரு காலகட்டத்தில், இந்த  நீட்டிப்பு இத்துறைக்கு மிகவும் தேவையான நிவாரணத்தை வழங்கியிருப்பதுடன், ஆடை ஏற்றுமதிக்கு மேலும் உத் வேகம் அளிக்கும் என்றும் எதிர்பார்ப்பதாக ஏ.சக்திவேல் தெரி வித்துள்ளார்.  இந்த நீட்டிப்பை வரவேற்றாலும், இத்திட்டத்தை குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிப்பது குறித்து பரிசீலிக்குமாறு ஒன்றிய அரசிடம் ஏஈபிசி கோரிக்கை விடுத் துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.