தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

26 Mar 2026, 2:46 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

மீன் பிடிக்கச் சென்ற 2 பள்ளி  சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

கோவை, மார்ச். 26- கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளை யம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற 6-ஆம் வகுப்பு மாண வர்கள் இருவர், எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரி ழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. கண்ணம்பாளையம் திரு.வி.க. நகர் பகுதியைச் சேர்ந்த  ரமேஷ் என்பவரது மகன் சுஜித் குமார் (11) மற்றும் அதே  பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்பவரது மகன் பிரதோஷ்  (11) ஆகிய இருவரும் நண்பர்கள். ஒட்டர்பாளையம் பகுதி யில் உள்ள தனியார் பள்ளியில் இருவரும் 6-ஆம் வகுப்பு  படித்து வந்தனர். வியாழனன்று  மதியம் பள்ளிக்குச் செல்ல  வேண்டிய நிலையில், காலையிலேயே இருவரும் மீன்  பிடிப்பதற்காகக் கண்ணம்பாளையம் குளத்திற்குச் சென் றுள்ளனர். குளம் தற்போது நிரம்பி வழியும் நிலையில், கரையில்  அமர்ந்து மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஒருவர் கால் இடறி விழுந்ததாகத் தெரிகிறது. அவரைக் காப்பாற்ற முயன்றபோது மற்றொரு சிறுவனும்  நீரில் மூழ்கியுள்ளார். இந்நிலையில், குளத்தில் சிறுவன் ஒரு வனின் சடலம் மிதப்பதைக் கண்ட பொதுமக்கள் போலீ சாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் போலீசார் மற்றும் தீய ணைப்புத் துறையினர், குளத்தில் மிதந்த ஒரு சிறுவ னின் சடலத்தை மீட்டனர். தொடர்ந்து குளத்திற்குள் தேடிய போது மற்றொரு சிறுவனின் சடலமும் கண்டெடுக்கப் பட்டது. உயிரிழந்த சிறுவர்களின் உடல்களைக் கைப்பற் றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பள்ளி  மாணவர்கள் இருவர் உயிரிழந்த இச்சம்பவம் குறித்துச்  சூலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.

மின்வேலியில் சிக்கி யானை பலியான விவகாரம்: ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறை

கோவை, மார்ச். 26- ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கடந்த 2022-ஆம் ஆண்டு மின்வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழந்த  வழக்கில், தோட்ட உரிமையாளருக்கு 5 ஆண்டுகள் சிறை  தண்டனை மற்றும் அபராதம் விதித்து கோவை சிபிஐ நீதி மன்றம் வியாழனன்று தீர்ப்பளித்தது. கடந்த 2022-ஆம் ஆண்டு சத்தியமங்கலம் வனப் பகுதியை ஒட்டியுள்ள விவசாயத் தோட்டம் ஒன்றில், சட்டவி ரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி ஆண்  காட்டு யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து வனத்துறையினர் நடத்திய விசாரணையில், அந்தத்  தோட்டத்தின் உரிமையாளரான ரங்கராஜ் (62) என்பவர், காட்டு விலங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்க தனது நிலத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த வேலியில்  உயர் அழுத்த மின்சாரத்தைச் செலுத்தியது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, வன உயிரின பாதுகாப்புச் சட்டத் தின் கீழ் வனத்துறையினர் ரங்கராஜ் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். இந்த வழக்கின் விசா ரணை கோவை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று  வந்தது. வனத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆதா ரங்கள் மற்றும் சாட்சியங்களை பரிசீலித்த நீதிபதி,  ரங்கராஜ் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்ட தாகத் தெரிவித்தார். வன விலங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகை யில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்தது மிகப்பெரிய  குற்றம் எனக் குறிப்பிட்ட நீதிபதி, ரங்கராஜிற்கு 5 ஆண்டுகள்  கடுங்காவல் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.

நகைக்காக மூதாட்டி கொலை: தோழி கைது

கோவை, மார்ச் 26– பொள்ளாச்சி அருகே 8 பவுன் தங்க நகைக்காக தனது  நீண்ட காலத் தோழியையே கொலை செய்த 75 வயது மூதாட்டியை ஒரு மாத கால தீவிர விசாரணைக்குப் பிறகு  போலீசார் கைது செய்தனர். பொள்ளாச்சி - பாலக்காடு சாலை, அன்பு நகரைச் சேர்ந்த வர் விசாலாட்சி (77). இவர் கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி  தனது வீட்டில் உயிரிழந்து கிடந்தார். அவர் அணிந்திருந்த  8 பவுன் தங்க நகைகள் காணாமல் போயிருந்தது. இது குறித்து அவரது மகன் நமச்சிவாயம் போலீசில் புகாரளித் தார். முதலில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்த  பொள்ளாச்சி மேற்கு போலீசார், பிரேதப் பரிசோதனை  அறிக்கையில் விசாலாட்சி கழுத்து நெரிக்கப்பட்டு  கொலை செய்யப்பட்டதை உறுதி செய்தனர். இதனைத்  தொடர்ந்து 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, 200-க்கும்  மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசா ரணை நடத்தப்பட்டது. விசாரணையில், விசாலாட்சியின்  பக்கத்து வீட்டில் வசிக்கும் அவரது 25 ஆண்டு கால தோழி யான சரோஜா (75) மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.  உயிரிழந்த உதவி ஆய்வாளரின் மனைவியான சரோஜா விடம் நடத்திய தீவிர விசாரணையில், நகையின் மீது  கொண்ட ஆசையினால் விசாலாட்சியை அவர் கொலை  செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து வியாழனன்று  சரோஜாவை கைது செய்த போலீசார், அவரை  நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.

அரசுப்பள்ளி மாணவிக்கு ஒன்றிய அரசு விருது ஈரோடு, மார்ச் 26- பெருந்துறை அருகே உள்ள அரசு நடுநிலைப்பள்ளி மாண வியின் அறிவியல் படைப்புக்கு ஒன்றிய அரசின் விருது கிடைத்துள்ளது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள சுண்டக் காம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வரு கிறது. இங்கு 6 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி காவியா,  தானியங்கி துணி உளர்த்தும் படைப்பை உருவாக்கியி ருந்தார். இந்த ஆண்டு சிறந்த அறிவியல் படைப்புக்கான இன்ஸ்பயர் விருது, ஒன்றிய அரசின் அறிவியல் மற்றும்  தொழில்நுட்பத்துறை சார்பில் காவியாவிற்கு வழங்கப் பட்டுள்ளது. விருதுடன் ரூ.10 ஆயிரம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதனன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவிக்கு விருது மற்றும் பரிசுத் தொகையை தலைமையாசிரியர் காளி யப்பன் வழங்கிப் பாராட்டினார். மேலும், பயிற்சி அளித்த  அறிவியல் ஆசிரியர் தமிழரசி, கணினி ஆசிரியர் ராஜா மணி ஆகியோருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தனியார் சுத்திகரிப்பு நிலையத்தால் நீர்மட்டம் குறைவு கருத்து தெரிவித்தவரை தாக்கிய 6 பேர் கைது

தருமபுரி, மார்ச் 26- ஏரியூர் அருகே தனியார் தண்ணீர் சுத்தி கரிப்பு நிலையத்தினால் நிலத்தடி நீர்மட்டம் குறைவதாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட  நபரை தாக்கிய வழக்கில் 6 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள ஈச்சம்பாடி பகுதியில் தனியார் குடிநீர்  சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது.  இந்த சுத்திகரிப்பு நிலையத்திற்கு நாள் தோறும் ஆழ்துளை கிணற்றினால் உறிஞ் சப்படும் தண்ணீரால், சுற்றுவட்டார பகுதிக ளில் நிலத்தடி நீர்மட்டம் குறைவதாக சோளப் பாடி பகுதியை சேர்ந்த ராஜசேகரன் (30) என்ப வர் சமூக வலைதளத்தில் கருத்து பதிவேற்றம்  செய்தார். இதனை கண்ட தனியார் சுத்தி கரிப்பு நிலையத்தின் உரிமையாளர் சாமிக் கண்ணு (55) மற்றும் அவருடைய ஆதரவா ளர்கள் செவ்வாயன்று ஏரியூர் காவல் நிலை யம் அருகே சோளப்பாடி பிரிவு சாலைப்பகுதி யில் உள்ள சிற்றுண்டி கடையில் அமர்ந்தி ருந்த ராஜசேகரிடம் தகராறில் ஈடுபட்டு, அவரை தாக்கினர். இதில் படுகாயமடைந்த ராஜசேகர் பென்னாகரம் அரசு மாவட்ட  தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர் பாக ஏரியூர் காவல் நிலையத்தில் ராஜசேக ரன் அளித்த புகாரின் பேரில், சாமிக்கண்ணு (55), கிருஷ்ணகிரி தேர்பேட்டை பகுதியை சேர்ந்த சூரிய பிரகாஷ் (32), ஒசூர் பகுதியை  சேர்ந்த சரவணக்குமார் (26), ஈச்சம்பாடி பகுதியை சேர்ந்த மதன்குமார் (33), மணி கண்டன் (30), முருகேசன் (43) ஆகிய ஆறு  பேரை காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து, ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

மகளிர் ஓட்டுநர் பயிற்சி பெறும் திட்டத்தில் முறைகேடு: சிபிஎம் புகார்

ஈரோடு, மார்ச் 26- மகளிர் இலவசமாக ஓட்டுநர் உரிமம் பெறும் திட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகாரளித்துள்ளது. தமிழ்நாடு அரசு பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை குறிப்பாக மகளிருக்கு பல  திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்று இலவச ஓட்டுநர் பயிற்சி மற்றும்  வேலை வாய்ப்புத் திட்டம். இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாவட்டங்களில் ஈரோடு மாவட்டமும் அடங்கும். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சாலை போக்குவரத்து நிறுவனம் மூலம் தொழில் மேம்பாட்டுத் துறையினரால் செயல்படுத்தப்படுகிறது. இலவச பயிற்சியைத் தொடர்ந்து வேலை வாய்ப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவது இத் திட்டத்தின் முக்கிய அம்சம் ஆகும். இதன்  ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம், கொடுமுடி  வட்டாரப் பகுதியில் கிராமப்புற பெண் கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப் பட்டது. திருமகள் ஓட்டுநர் பயிற்சி பள்ளியி னர் பயிற்சி அளித்தனர். 4 சக்கர வாகனங்க ளுக்கு ரூ.5 ஆயிரம் மற்றும் இரு சக்கர  வாகன ஓட்டுநர் உரிமத்திற்கு ரூ.1150 கட்டண மாக நிர்ணயிக்கப்பட்டது. இதல் முதல்  தவணையாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. 20 பேர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், 10 பெண்களுக்கு மட்டுமே ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய 10 பேருக்கு உரிமம் வழங்கப்படவில்லை. இந்நிலையில், திட்ட அலுவலர் (செண்பகவள்ளி) பயிற்சி  முடித்தவர்களிடமும், உரிமம் பெறாதவர்களி டமும் தலா ரூ.2500 பெற்று வருவதாக புகார்  எழுந்துள்ளது. அத்துடன் பயிற்சி பள்ளிக்கு வழங்க வேண்டிய தொகையும் பாக்கி இருப் பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உரிய நட வடிக்கை எடுக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கொடுமுடி தாலுகாக்குழு உறுப்பினர் கே.பி.கனகவேல் மாவட்ட ஆட்சி யருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.

இளைஞரின் கழுத்தை அறுத்த 2 பேர் கைது

உதகை, மார்ச் 26- முன்விரோதம் காரணமாக இளைஞரின் கழுத்தை அறுத்த சம்பவம் தொடர்பாக 2  பேரை காவல் துறையினர் கைது செய்த னர். நீலகிரி மாவட்டம், உதகையை அடுத்த அழகர்மலை பகுதியை சேர்ந்தவர் பிரதாப்  (34), கேரட் மூட்டை தூக்கும் வேலைக்கு  சென்று வருகிறார். கடந்த சில நாட்களுக்கு  முன்பு பிரதாப்பின் மனைவி விஷம் குடித்து  தற்கொலை செய்துகொண்டார். இதனால் மிகுந்த மன வருத்தத்தில் பிரதாப் இருந்துள் ளார். இந்த சம்பவத்துக்கு தலைகுந்தா பகுதியை சேர்ந்த மணிகண்டன் (26) தான் கார ணம் என பிரதாப் நினைத்துள்ளார். இந்நிலை யில், உதகை காபிஹவுஸ் பகுதியில் உள்ள  மதுபானக்கூடத்திற்கு சகோதரர் ரஞ்சித்  குமார் (32) உடன் பிரதாப் வந்திருந்தார்.  அப்போது அங்கு வந்த மணிகண்டனுடன் பிர தாப் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த  தகராறு கைகலப்பாக மாறி இருவரும்  சேர்ந்து மணிகண்டனை சரமாரியாக தாக்கி யுள்ளனர். மேலும், தன்னிடமிருந்த சிறிய  பேனா கத்தியை எடுத்து மணிகண்டனின் கழுத்தில் பிரதாப் அறுத்துள்ளார். இது குறித்து அங்கிருந்தவர்கள் அளித்த தகவ லின்பேரில் உதகை மத்திய காவல் துறை யினர், சம்பவ இடத்திற்கு வந்து மணிகண் டனை மீட்டு உதகை அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக விசா ரணை நடத்தி பிரதாப், ரஞ்சித்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

மலர் செடிகளை பாதுகாக்கும் பணி தீவிரம்

உதகை, மார்ச் 26- மலர் கண்காட்சிக்காக உதகை தாவரவி யல் பூங்காவில் மலர் செடிகள் தரையில் விழா மல் இருக்க குச்சிகள் நடவு செய்யப்பட்டுள் ளது. ஆண்டுதோறும் கோடை காலமான ஏப் ரல் மற்றும் மே மாதங்களில் உதகைக்கு ஏராள மான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.  இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ் விப்பதற்காக ஆண்டுதோறும் மே மாதம் உதகை தாவரவியல் பூங்காவில் மலர் கண் காட்சி நடத்தப்படுகிறது. தற்போது மலர் கண் காட்சிக்காக பூங்காவை தயார் செய்யும் பணி கள் நடந்து வருகிறது. பூங்கா முழுவதிலும் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட் டுள்ளன. இதனை பராமரிக்கும் பணிகள் தீவிர மாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,  பூங்காவில் தற்போது மலர் செடிகள் அனைத் தும் வளர்ந்துள்ளன. ஒரு சில செடிகளில் மொட்டுக்களும் காணப்படுகிறது. குறிப் பாக, டேலியா மலர் செடிகள் தற்போது நீண்டு  வளர்ந்துள்ளன. மலர் செடிகள் தரையில் விழாமல் இருக்க, தற்போது செடிகளின் அருகே பாதுகாப்பற்காக குச்சிகள் நடப்பட் டுள்ளன. பூங்கா முழுவதிலும் உள்ள டேலியா  செடிகள் மற்றும் தொட்டிகளில் வைக்கப்பட் டுள்ள டேலியா செடிகளுக்கும் குச்சிகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

பல்லடத்தில் கறிவேப்பிலை பவுடர் தொழிற்சாலை அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

திருப்பூர், மார்ச் 26 - திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும்  சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாகுபடி செய்யப் படும் கறிவேப்பிலை, விற்பனையில் ஏற்படும்  ஏற்றத்தாழ்வு காரணமாக விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுத்தி வருகிறது. இதனைத் தவிர்த்து, மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக மாற்ற தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பல்லடம், பொங்கலூர் உள்ளிட்ட பகுதிக ளில் குறைந்த நீர்வளத்தில் தொடர்ந்து வரு மானம் தரும் பயிராக கறிவேப்பிலை சாகுபடி  உள்ளது. இருப்பினும், திருமணம் மற்றும் முகூர்த்த காலங்களில் மட்டும் விலை சற்று  உயர்வாக கிடைக்கிறது. மற்ற நாட்களில் விலை குறைந்தும், சில சமயங்களில் விற் பனை இல்லாமல் தேக்கமடைந்தும் விவசா யிகள் இழப்பை சந்திக்கின்றனர். தற்போது அறுவடை செய்யப்படும் கறிவேப்பிலை கோவை, ஈரோடு, சென்னை, கேரளா உள் ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்த விவ சாயிகள் சிலர் கூறுகையில், கறிவேப்பி லைக்கு நிலையான விலை இல்லை. அதிகள வில் சாகுபடி இருப்பதால், விற்பனையாகா மல் தேங்கும் நிலை ஏற்படுகிறது. எனவே,  விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு  பல்லடம் பகுதியில் கறிவேப்பிலை பவுடர்  தயாரிக்கும் தொழிற்சாலையை அரசு அமைத்துத் தர வேண்டும். இதன் மூலம்  தேக்கமடையும் கறிவேப்பிலையை பவுட ராக மாற்றி மதிப்புக்கூட்டு பொருளாக சந் தைப்படுத்த முடியும். இது விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கையாக உள்ளது என  வலியுறுத்தினர்.

வடமாநில தொழிலாளிக்கு பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள்

திருப்பூர். மார்ச் 26 - திருப்பூரில் வடமாநில தொழிலா ளிக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து  108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு துரி தமாக செயல்பட்டு பிரசவம் பார்த்துள்ள னர். இவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து  வருகிறது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் கரண் மத்தோ. இவரது மனைவி சுலேகா  குமாரி (20). தையல் தொழிலாளியான இவர்கள் திருப்பூர் முதலிபாளையம் சிட்கோ அருகே உள்ள மாணிக்காபுரம் புதூர் பகுதியில் வசித்து வருகின்றனர். புதனன்று இரவு சுலேகா குமாரிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உறவினர்கள் உடனடி யாக 108 அவசர ஊர்திக்கு தகவல் தெரி வித்தனர். ஊத்துக்குளி யூனியன் அலுவ லக பகுதியில் இருந்த ஆம்புலன்ஸ் விரைந்து சென்று சுலேகா குமாரியை ஏற்றிக்கொண்டு திருப்பூர் அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவமனை நோக் கிப் புறப்பட்டது. ஆம்புலன்ஸில் மருத் துவ உதவியாளர் கோவிந்தராஜ் மற்றும் ஓட்டுநர் செந்தில் குமார் ஆகியோர் இருந்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சுலேகா குமாரிக்கு வலி அதிகரித்ததுடன், குழந்தை பிறக்கும் அறிகுறிகள் தென்பட்டுள்ளது. இதையடுத்து, மருத் துவ உதவியாளர் கோவிந்தராஜ் ஆம்பு லன்ஸிலேயே பிரசவம் பார்க்கத் தொடங்கினார். இதில் சுலேகா குமா ரிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதைத் தொடர்ந்து தாய் மற்றும் குழந்தைக்கு  தேவையான முதலுதவிகள் வழங்கப் பட்டு, இருவரும் பாதுகாப்பாக திருப் பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிறந்த குழந்தை 2.80 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்து வர்கள் தெரிவித்தனர். தக்க நேரத்தில்  துரிதமாகச் செயல்பட்டு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்க ளைப் பொதுமக்கள் மற்றும் மருத்து வமனை ஊழியர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

விழிப்புணர்வு திருப்பூர், மார்ச் 26- திருப்பூர் மாநகராட்சி, தியாகி திருப்பூர் குமரன் பேருந்து நிலையம் அருகில்  உள்ள உழவர் சந்தையில் 100  சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து காய்கறி கள் மூலம் விழிப்புணர்வு ஏற் படுத்தப்பட்டுள்ளதை மாவட்ட தேர்தல் அலுவலர் மனிஷ் நாரணவரே பார்வை யிட்டு வியாபாரிகள் மற்றும்  விவசாயிகளுக்கு விழிப்பு ணர்வு  துண்டு பிரசுரங்களை  வழங்கினார்.  இந்நிகழ்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முக மையின் திட்ட இயக்குநர் க. சங்கமித்திரை உள்ளிட்ட துறை சார்ந்த  அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தாகம் தீர்த்த ஆறுகள் தவிப்பு: வணிக மயமாகும் குடிநீர்

“நீரின்றி அமையாது உலகு” என்பது வள்ளுவர் வாக்கு. ஆனால் இன்று, “பணமின்றி அமையாது நன்னீர்” என்ற அவலநிலைக்கு சமூ கம் தள்ளப்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் கழிவுநீர் கலப்பு, நிலத்தடி  நீர்மட்டம் சரிவு மற்றும் பராமரிப்பற்ற  நீர்நிலைகள் எனப் பல காரணிக ளால், நாமக்கல் மாவட்டத்தில் குடிநீர்  என்பது ஒரு அத்தியாவசியத் தேவை யிலிருந்து மாறி, லாபம் ஈட்டும்  பெரும் வணிகமாக உருவெடுத்துள் ளது. ஒரு காலத்தில் திருமணங்கள் மற்றும் சுப விசேஷங்களில் காவிரி ஆற்று நீரும், கிணற்று நீருமே பிரதா னமாகப் பரிமாறப்பட்டன. ஆனால்,  இன்று நிலத்தடி நீர் மீதான நம்ப கத்தன்மை குறைந்துள்ளதால், பொதுமக்கள் மினரல் வாட்டர்  கேன்களை நோக்கிப் படையெடுக் கின்றனர். இதனைச் சாதகமாக்கிக் கொண்ட தனியார் நிறுவனங்கள், நீர்  ஆதாரம் அதிகம் உள்ள இடங்களை கண்டறிந்து, அங்கு ராட்சத  ஆழ்துளைக்ணறுகள் மூலம் நீரை  உறிஞ்சி, பிளாஸ்டிக் கேன்களில் அடைத்து விற்பனை செய்யும் தொழிற்சாலைகளை பெருக்கி யுள்ளன. தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதாலும், சட்டமன்றத்  தேர்தல் களம் சூடுபிடித்துள்ளதா லும் மினரல் வாட்டர் தேவை உச் சத்தை தொட்டுள்ளது. தேர்தல் பரப்பு ரையில் ஈடுபடும் அரசியல் கட்சியி னர் மற்றும் தொண்டர்களின் தாகத்தை  தணிக்க, பிரத்யேகமாக அரசி யல் கட்சிகளின் சின்னங்கள் மற்றும்  தலைவர்களின் உருவம் பொறிக்கப் பட்ட குடிநீர் பாட்டில்கள் ஆர்டரின் பேரில் தயாரிக்கப்பட்டு வந்தன. தற் போது தேர்தல் நடத்தை விதிமுறை கள் அமலில் உள்ளதால், அந்தந்த நிறுவனங்களின் பெயரிலேயே பாட் டில்கள் விற்பனை செய்யப்பட்டு வரு கின்றன. மின் கட்டண உயர்வு மற்றும் மூலப்பொருட்களின் விலை அதிக ரிப்பை காரணம் காட்டி, அண்மை யில் குடிநீர் பாட்டில்களின் விலை 2  ரூபாய் முதல் 5 ரூபாய் வரை உயர்த் தப்பட்டுள்ளது. “விலை உயர்ந்தா லும் வேறு வழியின்றி மக்கள் இதனை  வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்” எனத் தயாரிப்பு நிறுவன  உரிமையாளர்கள் தெரிவிக்கின்ற னர். இயற்கை நமக்கு இலவசமாக கொடுத்த நீரை, சுத்திகரிப்பு என்ற  பெயரில் வணிகமாக்கி, விலையை தீர்மானிக்கும் அதிகாரம் தனி யார் வசம் சென்றிருப்பது வேதனைக் குரியது. ஆரோக்கியக் கேள்விகளும் கார்ப்பரேட் ஆதிக்கமும் தொடர்ந்து சுத்திகரிப்பு செய்யப் பட்ட நீரைப் பருகுவதால், உடலில் தாது உப்புக்கள் குறைபாடு உள் ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சி னைகள் ஏற்படும் என ஆய்வுகள் எச்ச ரிக்கின்றன. இருப்பினும், நிலத்தடி  நீர் மற்றும் காவிரி நீர் வற்றியும், மாச டைந்தும் உள்ளதால், மக்களுக்கு வேறு தேர்வுகள் இல்லாத நிலை ஏற் பட்டுள்ளது. இந்தச் சூழலை லாபகர மாகப் பார்க்கும் பன்னாட்டு நிறுவ னங்கள், இத்தொழிலில் குதித்து கடும் போட்டியை உருவாக்கி வரு கின்றன. ஆறுகளிலும் ஏரிகளிலும் கழிவு கள் கலப்பதை தடுப்பதும், நீர்நிலை களை முறையாக தூர்வாரிப் பராம ரிப்பதும் மட்டுமே குடிநீர் வணிகமய மாவதை தடுப்பதற்கான ஒரே வழி.  இயற்கை வளங்களை சிதைத்து, நீரை விற்பனைப் பொருளாக மாற் றும் போக்கு நீடித்தால், வருங்கா லச் சந்ததியினர் ஒரு சொட்டு நன்னீ ருக்காகப் பெரும் விலையை செலுத்த வேண்டியிருக்கும். குடிநீரை வணிகமாக்கும் நடவ டிக்கைகளை தடுத்து நிறுத்தி, பாது காக்கப்பட்ட குடிநீரை அனைவ ருக்கும் தங்குதடையின்றி வழங்கு வது அரசின் கடமை மட்டுமல்ல, காலத்தின் கட்டாயமுமாகும்.

அனுமதி பெறாமல் சின்னம் வரைவதா? தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு

அவிநாசி, மார்ச் 26- அவிநாசி அருகே மங்கர சோலைபா ளையத்தில் பல்வேறு இடங்களில் தனி நப ருக்கு சொந்தமான இல்லங்களில் உரிய  அனுமதி பெறாமல் சின்னம் வரைந்துள் ளதாக தேர்தல் ஆணையத்திடம் சமூக  ஆர்வலர் ஒருவர் புகார் மனு அளித்துள் ளார்.  தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்ட மன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.  இந்த நிலையில் சின்னம் வரைவது தொடர் பாகவும், அனுமதி தொடர்பாகவும் தேர் தல் ஆணையம் உரிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இதில், தனிநபர் இல்லங் களில் உரிமையாளரிகளிடம் தேர்தல் ஆணையம் வழங்கும் அனுமதி கடிதத்தில்  கையொப்பம் பெற்று, தேர்தல் ஆணை யத்திடம் வழங்கிய பிறகே சின்னம் வரைய  வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. ஆனால் மங்கரசோலைபாளையத்தில் வீடுகளில் உரிய அனுமதி பெறாமல் சின்னம் வரைந்ததாக, அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சஞ்சீவ் மாநில தேர்தல் ஆணையத்திடம் இணையதள வழியாகவும், அதே போல மாவட்ட தேர் தல் ஆணையத்திடமும் புகார் மனு அளித் துள்ளார். இந்த மனுவையும் ஏற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக வும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

மைக் ரிப்பேருக்கெல்லாம் கோபப்படலாமா… சேலம், மார்ச் 26- மைக் பழுதானதால் கோபப்பட்ட சீமான், வாகனத்தின் உள்ளே மைக்கை தூக்கி வீசும் போது எதையோ உதைப்பதை போன்ற வீடியோ வெளியாகி உள்ளது. சேலம் மாவட்டத்தில், மேச்சேரி, ஓமலூர், சேலம், வாழப் பாடி, ஆத்தூர் ஆகிய பகுதிகளில் நாம் தமிழர் ஒருங்கிணைப் பாளர் சீமான் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, சேலம் மாநகர் பள்ளப்பட்டி பகுதியில் வாகனத்தின் மீது நின்று சீமான் பேசிக் கொண்டிருக்கும் போது மைக் பழுது  ஏற்பட்டது. இதனால், கோபப்பட்ட சீமான் மைக்கை வாக னத்தின் உள்பக்கம் தூக்கி வீசி எறிந்து விட்டு, வாக னத்தில் உள்ளே எதையோ உதைப்பது போன்ற வீடியோ  வெளியாகியுள்ளது. சுட்டெடுக்கும் சூரியனின் உக்கிரம் தாங்காமல், உளருவதோடு மட்டுமல்லாமல் உதைக்கும்  வேலையிலும் ஈடுபட்டுள்ளாரா சீமான் என சுற்றியிருந்த வர்கள் நகைக்க ஆரம்பித்துவிட்டனர்.

வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு தருமபுரி, மார்ச் 26- அரசு கலைக்கல்லூரி மாணவர்களிடையே, வாக்களிப்ப தன் அவசியம் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் ரெ.சதீஷ் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்.23 ஆம் தேதியன்று நடைபெற உள்ளதையொட்டி, 100 சதவிகிதம் வாக்களிப்ப தன் அவசியம் குறித்து, தருமபுரி மாவட்டம், அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் விழிப்புணர்வு நிகழ்ச்சி புதனன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியரு மான ரெ.சதீஷ், ‘என் வாக்கு, என் உரிமை’ என்ற விழிப்பு ணர்வு இலட்சினை-யினை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி னார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மக ளிர் திட்ட அலுவலர் சு.சுந்தர்ராஜன், அரூர் தேர்தல் நடத் தும் அலுவலர் சி.செம்மலை உட்பட பலர் கலந்து கொண் டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.