தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ம.பி: 6 ஆண்டுகளில் 2.6 லட்சம் பெண்கள், சிறுமிகள் காணாமல் போயுள்ளனர் - அதிர்ச்சி தகவல்

23 Feb 2026, 9:59 am
ம.பி: 6 ஆண்டுகளில் 2.6 லட்சம் பெண்கள், சிறுமிகள் காணாமல் போயுள்ளனர் - அதிர்ச்சி தகவல்

பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் கடந்த 6 ஆண்டுகளில் 2.6 லட்சம் பெண்கள் மற்றும் சிறுமிகள் காணாமல் போயுள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தில் கடந்த 2020 முதல் 2026 வரை பெண்கள் மற்றும் சிறுமிகள் காணாமல் போன வழங்குகள் மற்றும் அதன் நிலை குறித்து அம்மாநில சட்டமன்றத்தில் கடந்த பிப்ரவரி 18 அன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. விக்ராந்த் பூரியா கேள்வி எழுப்பினார். இதற்கு எழுத்து பூர்வமாக பதிலளித்த அம்மாநில அரசு, கடந்த 6 ஆண்டுகளில் காணாமல் போயுள்ள 2.6 லட்சம் பெண்கள் மற்றும் சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ளது. இவர்களில் பெண்கள் 2.06 லட்சம் பேர், சிறுமிகள் 63,500 பேர் ஆவர். காணாமல் போனவர்களில், 50,000க்கும் மேற்பட்டோர்  [பெண்கள் (48000 பேர்), சிறுமிகள் (2200 பேர்)] இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், அவர்கள் இருக்கும் இடம் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் வழக்குகள் 'நிலுவையில்' இருப்பதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
6 ஆண்டுகாளில், மாநிலத்தில் அதிகபட்சமாக இந்தூரில் 4,449 பெண்களும், 135 சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர். ஜபால்பூரில் 2,296 பெண்காளும், 86 சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர். போபாலில், 1,685 பெண்களும், 56 சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர். தொடர்ந்து குவாலியரில் 1,188 பெண்களும், 14 சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர்.
கடந்த 2025-26 ஆம் ஆண்டின் அம்மாநில பட்ஜெட்டில் பெண்கள் பாதுகாப்புக்காக ரூ.41.88 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.