தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நெல்லை அருகே மூதாட்டியைக் கட்டிப்போட்டு 25 பவுன், ரூ.6 லட்சம் கொள்ளை-2 பேர் கைது!

16 Jan 2026, 3:00 pm
நெல்லை அருகே மூதாட்டியைக் கட்டிப்போட்டு  25 பவுன், ரூ.6 லட்சம்  கொள்ளை-2 பேர் கைது!
<p><strong>நெல்லை அருகே மூதாட்டியைக் கட்டிப்போட்டு &nbsp;25 பவுன், ரூ.6 லட்சம் &nbsp;கொள்ளை-2 பேர் கைது!</strong></p> <p>&nbsp;திருநெல்வேலி, ஜன. 16 நெல்லை அருகே மூதாட்டியைத் தாக்கி, கை, கால்களைக் கட்டிப்போட்டு 25 பவுன் &nbsp;நகை மற்றும் 6 லட்சம் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்த வழக்கில், நவீன தொழில் நுட்ப உதவியுடன் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். &nbsp;கொள்ளையடித்த நகைகளை போலீசில் &nbsp;சிக்காமல் இருக்க சென்னையில் அடகு &nbsp;வைத்தது விசாரணையில் அம்பலமாகி யுள்ளது. நெல்லை மாவட்டம் சுத்தமல்லி பொன் விழா நகரைச் சேர்ந்தவர் சன்னியாசி. இவர் &nbsp;குடும்பத்துடன் சென்னையில் தங்கி பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். சுத்த மல்லியில் உள்ள அவரது வீட்டில் மாமனார் மாரி மற்றும் மாமியார் ஆண்டிச்சி (70) ஆகி யோர் வசித்து வருகின்றனர். கடந்த 8-ம் தேதி காலை, மாரி வெளியே சென்றிருந்த நேரத்தில் ஆண்டிச்சி மட்டும் &nbsp;வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது &nbsp;வீட்டிற்குள் நுழைந்த நபர்கள் இருவர், குடிப்பதற்குத் தண்ணீர் கேட்பது போல் நடித்து ஆண்டிச்சியின் கவனத்தைத் திசை திருப்பினர். திடீரென அவரைத் தாக்கிய அந்த கும்பல், கயிறுகளால் அவரது கை, கால்களைக் கட்டிப்போட்டு வாயையும் பொத்தினர்.ஆண்டிச்சி அணிந்திருந்த தங்கச் &nbsp;சங்கிலி, மூக்குத்தி, கம்மல் என 15 சவரன் &nbsp;நகைகளை வலுக்கட்டாயமாகப் பறித்த கொள்ளையர்கள், பின்னர் வீட்டின் பீரோ வைத் திறந்து அதில் இருந்த 10 சவரன் நகை கள் மற்றும் 6 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத் தையும் கொள்ளையடித்தனர். கொள்ளை போன நகை மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு சுமார் 26 லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து சுத்தமல்லி போலீ சார் வழக்குப் பதிவு செய்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் &nbsp;பிரசன்னகுமார் உத்தரவின் பேரில், குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. போலீசார் அப்பகுதியில் இருந்த பல சி.சி.டி.வி. (CCTV) கேமரா காட்சிகளை &nbsp;ஆய்வு செய்தனர். &nbsp;சம்பவத்தன்று அப்பகுதியில் நடமாடிய சந்தேகத்திற்குரிய நபர்களின் அலைபேசி சிக்னல்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் &nbsp;கொள்ளையர்களின் இருப்பிடம் உறுதி &nbsp;செய்யப்பட்டது. விசாரணையில், பேட்டை அண்ணாமலை நகரைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவரது உறவினரான ஜீவா நகரைச் சேர்ந்த சுந்தர் ஆகிய இருவரும் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். விசாரணையில் &nbsp;நெல்லை பகுதியில் நகைகளை விற்றாலோ அல்லது அடகு வைத்தாலோ போலீசில் சிக்கிக் கொள்வோம் என்று நினைத்த கொள்ளையர்கள், மிகவும் புத்திசாலித்தனமாகச் செயல்படுவதாகக் கருதி, கொள்ளையடித்த நகைகளுடன் சென்னைக்குத் தப்பிச் சென்றுள்ளனர். அங்குள்ள ஒரு தனியார் பைனான்ஸ் நிறு வனத்தில் நகைகளை அடகு வைத்துப் &nbsp;பணமாக மாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கைது செய்யப்பட்டவர்களிட மிருந்து தகவல்களைப் பெற்றுள்ள தனிப்படை போலீசார் சென்னை விரைந்து ஒள்ளனர். அங்கு தனியார் நிறுவனத்தில் அடகு வைக்கப்பட்டுள்ள நகைகளைச் சட்டப்படி மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு &nbsp;வருகின்றனர்.குற்றம் நடந்த சில நாட்களி லேயே, எவ்விதத் தடயமும் இன்றித் தப்பிய &nbsp;கொள்ளையர்களைத் தொழில்நுட்ப உதவி யுடன் துல்லியமாகக் கண்டறிந்து கைது செய்த தனிப்படை போலீசாரை எஸ்.பி. &nbsp;பிரசன்னகுமார் நேரில் அழைத்து &nbsp;பாராட்டி னார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.