அமெரிக்காவின் வரி விதிப்பு அடாவடியால் 2 லட்சம் விசைத்தறிகள் முடக்கம்!
21 Jan 2026, 3:58 pm
<p><strong>அமெரிக்காவின் வரி விதிப்பு அடாவடியால் 2 லட்சம் விசைத்தறிகள் முடக்கம்!</strong></p>
<p>கோயம்புத்தூர், ஜன. 21 - அமெரிக்க ஜனாதிபதி டொ னால்ட் டிரம்ப்பின் புதிய வர்த்தகக் கொள்கைகள் மற்றும் இறக்குமதி வரி உயர்வால், இந்திய ஜவுளித் துறை பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இதன் விளை வாக, இந்தியா முழுவதும் சுமார் 2 லட்சம் விசைத்தறிகளும், தமிழ கத்தில் மட்டும் சுமார் 80 ஆயிரம் விசைத்தறிகளும் நிறுத்தப்பட்டு, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட் டுள்ளது. ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்று கூறிவரும் அமெரிக்கா, மிரட்டல் உத்தியாக இந்தியா மீதான இறக்குமதி வரியை 50 சதவிகித மாக உயர்த்தியுள்ளது. இதனால் இந்திய ஜவுளி ஏற்றுமதி, குறிப்பாக கோவை மற்றும் திருப்பூர் மாவட் டங்களில் உள்ள ஏற்றுமதியாளர் கள் மற்றும் விசைத்தறியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள னர். அமெரிக்க நிறுவனங்களுக்காக மட்டுமே பிரத்யேகமாக ஜவுளி உற் பத்தி செய்து வந்த பல நிறுவனங் கள், தற்போது உற்பத்தியை முற்றி லுமாக நிறுத்தி மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. தென்னிந்திய பஞ்சாலை சங்கத்தின் (SIMA) கவலை இது குறித்து தென்னிந்திய பஞ்சாலை சங்கத்தின் (SIMA) பொ துச்செயலாளர் செல்வராஜ் கூறுகை யில்: “இந்தியாவின் மொத்த ஜவுளி ஏற்றுமதியான 36 பில்லியன் டால ரில், அமெரிக்காவிற்கு மட்டுமே 11 பில்லியன் டாலர் ஏற்றுமதி செய்யப் படுகிறது. கடந்த 20 ஆண்டுகளாக உழைத்து உருவாக்கிய இந்தச் சந்தை, தற்போதைய வரி உயர் வால் சரிவைச் சந்தித்துள்ளது. குறிப் பாக படுக்கை விரிப்புகள், சமைய லறை துணிகள் (Kitchen Linens) தயாரிப்பாளர்கள் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளனர். ஜனவரி முதல் இந்த வரி விதிப்பு முழுமையாக அமலுக்கு வந்துள்ள தால், ஆர்டர்கள் அனைத்தும் பாகிஸ் தான், வியட்நாம் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளுக்குச் செல்லத் தொடங்கியுள்ளன. அங்கு வரி விகிதம் குறைவாக இருப்பதே இதற்கு காரணம். இழந்த சந்தையை மீண்டும் பிடிப்பது மிகக் கடினம்” என்கிறார். பருத்தி பஞ்சு மீதான இறக்கு மதி வரி 11 சதவிகிதமாக உயர்த்தப் பட்டு உள்ளது. இதனால் பஞ்சு விலை உயர்ந்து (355 கிலோவிற்கு ரூ. 3,000 வரை உயர்வு) உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது. இதனை ஒன்றிய அரசு உடனடியாக நீக்க வேண்டும். ரிசர்வ் வங்கியிடம் பெற்ற கடன்களைத் திருப்பிச் செலுத்த வழங்கப்பட்ட கால அவகா சத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும். ஐரோப்பா மற்றும் இங்கிலாந்துடனான வரி யில்லா வர்த்தக ஒப்பந்தங்களை விரைந்து நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும். கோவை வார்ப்புத் தொழிலுக்கு (Foundry) சவால் கோவை நகரின் மற்றொரு முக்கியத் தொழிலான ‘வார்ப்புரு’ (Casting) தொழிலும் இந்த வரி விதிப்பால் தத்தளிக்கிறது. இது குறித்து ‘கொடிசியா’ (CODISSIA) தலைவர் கார்த்திகே யன் கூறுகையில்: “கோவையில் இருந்து அமெரிக்காவிற்கு 40 சதவிகித வார்ப்புருக்கள் ஏற்றுமதி செய்யப் படுகின்றன. அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவின் தயாரிப்புகளைச் சார்ந்துள்ளதால், இந்த வரி உயர்வு அவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத் தும். மூலப்பொருட்களான தாமிரம் (Copper) மற்றும் இரும்பின் விலை 35 சதவிகிதம் வரை உயர்ந்துள்ள நிலையில், இந்த வரி விதிப்பு சிறு, குறு நிறுவனங்களை முற்றிலுமாக அழித்துவிடும். 5 சதவிகிதமாக இருந்த இறக்குமதி வரி 12 சதவிகிதமாக உயர்த்தப்பட்டிருப்பது பெரும் சுமையாகும்,” என்றார். அமெரிக்காவின் 500 சதவிகித வரி அச்சுறுத்தல் என்பது நடை முறைக்குச் சாத்தியமற்றது என்றா லும், இந்தியத் தொழில் நிறுவனங் கள் தங்களது தன்மானத்தை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. அமெரிக்காவிற்கு மாற்றாக ஐரோப் பியச் சந்தைகளை நோக்கி இந்திய நிறுவனங்கள் நகரத் தொடங்கி யுள்ளன. எனினும், ஒன்றிய அரசு தலை யிட்டு, ஜவுளி மற்றும் சிறு தொழில் களைக் காக்க சிறப்புத் திட்டங்களை யும், வரிச் சலுகைகளையும் அறிவிக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்தத் தொழில்துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.</p>
