லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலி
11 Nov 2025, 3:41 pm
<p><strong>லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலி</strong></p>
<p>ஈரோடு, நவ.11- பவானி அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில், கல்லூரி மாண வர், மாணவி உயிரிழந்தனர். ஈரோடு மாவட்டம், அந்தியூர், தவிட்டுப் பாளையம் பகுதியைச் சேர்ந்த சின்னசாமி என்பவரின் மகன் சதீஷ் (19). இதேபோன்று பவானி, காமராஜர் நகரைச் சேர்ந்தவர் சௌபர்னிகா (19). இருவரும் வெவ்வேறு பகுதிகளில் உள்ள தனியார் கல்லூரிகளில் முதலாமாண்டு படித்து வந்தனர். பள்ளித் தோழர்களான இருவரும் அந்தியூரில் இருந்து பவானிக்கு இருசக்கர வாகனத்தில் திங்களன்று சென்றுள்ளனர். தொட்டிபாளை யம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே சென்றபோது, எதிரே வந்த டிப்பர் லாரி சதீஷ் வாகனத்தின் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத் திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து பவானி காவல் துறையினர் வழக் குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
<p> </p>
