தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கழிவுநீர் தொட்டியில் விழுந்து 2 குழந்தைகள் உயிரிழப்பு

23 Mar 2026, 3:39 pm
கழிவுநீர் தொட்டியில் விழுந்து  2 குழந்தைகள் உயிரிழப்பு
<p><strong>கழிவுநீர் தொட்டியில் விழுந்து &nbsp;2 குழந்தைகள் உயிரிழப்பு</strong></p> <p>நாமக்கல், மார்ச் 23 - பள்ளிப்பாளையத்தை அடுத்துள்ள வெப்படை தனியார் நூற்பாலை அருகே &nbsp;அமைந்துள்ள வீட்டு பகுதியில் விளையாடிக் &nbsp;கொண்டிருந்த இரண்டு வடமாநில குழந்தை கள் மூடப்படாத கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தனர். ஈரோடு - சேலம் சாலை வெப்படையை &nbsp;அடுத்துள்ள அம்மன் கோவில் வீதி பகுதி யில் அமைந்துள்ள பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த தியாகு என்பவருக்குச் சொந்தமான (தேவேந்திரா) தனியார் நூற்பாலையில் 600- க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் &nbsp;அங்கேயே தங்கி பணிபுரிந்து வருகின்றனர். &nbsp;நூற்பாலையில் கடந்த 5 ஆண்டுகளாக ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் குமார், &nbsp;அனிதா தம்பதியர் மற்றும் பரத்வாஜ், பாட்டோ தம்பதியர் நூற்பாலையில் பணி யாற்றி, நூற்பாலையின் அருகிலேயே வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த இரு வடமாநில தொழிலாளர்களின் வீடு அருகருகே இருப்பதால் இரு தம்பதி யர்களின் குழந்தைகளான லோகன் குமார் &nbsp;(4), ஹரிசங்கர் (3) ஆகிய இரண்டு குழந்தை கள் ஞாயிறன்று மாலை நூற்பாலையின் அருகே உள்ள வீட்டிற்கு வெளியே விளை யாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீ ரென இருவரும் காணாமல் போனதால், பெற் றோர்கள் இரு குழந்தைகளையும் தேடியுள்ள னர். &nbsp;குழந்தைகள் இருவரும் தனியார் நூற்பா லையில் இருந்து சுமார் 400 மீட்டர் தூரத்தில் &nbsp;நூற்பாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரை தேக்கி வைப்பதற்காக வைத்திருந்த, &nbsp;தரைதள கழிவு நீர் தொட்டியில் மிதப்பதைக் &nbsp;கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை யடுத்து இருசக்கர வாகனத்தில் உடனடியாக &nbsp;பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு குழந்தைகளை கொண்டு வந்தபோது குழந்தை கள் இருவரும் ஏற்கெனவே உயிரிழந்து விட்ட தாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உடற்கூராய்வுக்குப் பிறகே உடல்களை வழங்க முடியும் என போலீசார் தெரிவித்த னர். மேலும் இதுகுறித்து வெப்படை காவல் &nbsp;ஆய்வாளர் சங்கீதா, பள்ளிப்பாளையம் காவல் ஆய்வாளர் சிவக்குமார், பள்ளிப்பாளை யம் டிஎஸ்பி கௌதமன் உள்ளிட்டோர் பெற் றோரிடம் விசாரணை மேற்கொண்டனர். &nbsp;திங்களன்று காலை சுகாதாரத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தனியார் நூற்பா லையின் உள்ளே சென்று விசாரணை மேற் கொண்டனர். உடற்கூராய்வுக்குப் பின் இரு &nbsp;குழந்தைகளின் உடல்களும் அவர்களின் சொந்த மாநிலமான ஒடிசாவிற்கு ஆம்பு லன்ஸ் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.