தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2,78,762 வாக்காளர்கள்

23 Feb 2026, 5:35 pm
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2,78,762 வாக்காளர்கள்
<p><strong>கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2,78,762 வாக்காளர்கள்</strong></p> <p>கள்ளக்குறிச்சி, பிப். 23- இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவு றுத்தலின்படி, 2026ஆம் ஆண்டிற்கான சிறப்புத் தீவிரத் திருத்த இறுதி வாக்காளர் பட்டியலை கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் &nbsp;அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் திங்களன்று (பிப். 23) அங்கீ கரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னி லையில் வெளியிட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந் தூர்பேட்டை 1,48,929 ஆண் வாக்காளர்கள், 1,48,499 பெண் வாக்காளர்கள், 44 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,97,472 வாக்கா ளர்களும், ரிஷிவந்தியம் 1,35,292 ஆண் வாக்காளர்கள், 1,35,198 பெண் வாக்காளர் கள், மூன்றாம் பாலினத்தவர் 51 என மொத்தம் 2,70,541 வாக்காளர்களும், சங்கராபுரம் ஆண் வாக்காளர்கள் 1,30,231, பெண் வாக்கா ளர்கள், 1,32,859, மூன்றாம் பாலினத்தவர் 46 என மொத்தம் 2,63,136 வாக்காளர்களும், கள்ளக்குறிச்சி (தனி) ஆண் வாக்காளர்கள் 1,37,649, 1,41,044 பெண் வாக்காளர்கள், 69 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,78,762 வாக்காளர்களும் உள்ளனர். மாவட்டம் முழுவதும் 5,52,101 ஆண் வாக்காளர்கள், 5,57, 600 பெண் வாக்காளர் கள், மூன்றாம் பாலினத்தவர் 210 என மொத்தம் 11,09,911 வாக்களர்களும் உள்ளனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 1,435 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பட்டியலில் 17,535 மாற்றுத்திறனாளி வாக்கா ளர்களும், 85 வயதிற்கு மேற்பட்ட 6,260 மூத்த &nbsp;குடிமக்களும் இடம் பெற்றுள்ளனர். மொத்தம் 240 சேவை வாக்காளர்கள் உள்ள னர். பொதுமக்கள் தங்களது பெயர்களை அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலகங்கள் அல்லது https://voters.eci.gov.in/ மற்றும் [suspicious link removed] ஆகிய இணையதளங்கள் வாயிலாக சரிபார்த்துக் கொள்ளலாம். மேலும், திங்கட்கிழமை முதல் தொடர் திருத்தப் பணிகள் நடைபெற உள்ளதால், தகுதியுள்ளவர்கள் உரிய படிவங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ஜீவா மற்றும் இதர அரசு அலுவலர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.