பிச்சாவரம் கடற்கரையில் விடப்பட்ட 2,245 ஆமை குஞ்சுகள்
1 Mar 2026, 5:56 pm
<p><strong>பிச்சாவரம் கடற்கரையில் விடப்பட்ட 2,245 ஆமை குஞ்சுகள்</strong></p>
<p>சிதம்பரம், மார்ச். 1- சிதம்பரம் அருகே பிச்சாவரம் அலையாத்தி காடுகளை ஒட்டிய கடற்கரை பகுதியில், வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆலிவ் ரிட்லி கடல் ஆமை முட்டை பொரிப்பகத்தி லிருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2,245 ஆமை குஞ்சுகள் பாதுகாப்பாகக் கடலில் விடப்பட்டன. இந்நிகழ்ச்சி யில் அண்ணாமலை பல்கலைக்கழக கடல் உயர் ஆராய்ச்சி மைய முன்னாள் இயக்குனர் பேராசிரியர் கதிரேசன் கலந்து கொண்டு ஆமை குஞ்சுகளைக் கடலில் விட்டார். பிச்சாவரம் கடற்கரை ஓரத்தில் மொத்தம் ஆறு முட்டை பொரிப்பகங்கள் அமைக்கப்பட்டு, கடந்த டிசம்பர் மாதம் வரை 29,381 ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. முட்டையிட்ட 45 நாட்களுக்குப் பிறகு பொரித்து வெளி வரும் குஞ்சுகள் தொடர்ந்து கடலில் விடப்பட்டு வரு கின்றன. இந்த நிகழ்வில் பிச்சாவரம் வனசரக வனவர் ராஜேஷ்குமார், வனக்காப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர் கள் பலரும் கலந்து கொண்டனர்.</p>
