தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

2 இளைஞர்கள் ஆணவக்கொலை? கண்டன ஆர்ப்பாட்டம்

29 Nov 2025, 4:58 pm
2 இளைஞர்கள் ஆணவக்கொலை? கண்டன ஆர்ப்பாட்டம்
<p><strong>2 இளைஞர்கள் ஆணவக்கொலை? கண்டன ஆர்ப்பாட்டம்</strong></p> <p>தருமபுரி, நவ.29- பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் உயிரிழப் பிற்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், பாலக் கோடு வட்டம், சொன்னம்பட்டி பகு தியைச் சேர்ந்தவர்கள் சுனில் குமார் (19), முருகன் (20). பட்டியலி னத்தைச் சேர்ந்த இருவரும் மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்களை காதலித்து வந்துள்ளனர். இத னால் இளைஞர்களுக்கு அப்பெண் களின் பெற்றோர் மிரட்டல் விடுத்து வந்தனர். இந்நிலையில், நவ.26 ஆம் தேதியன்று பாலக்கோடு நோக்கி 2 பேரும் இருசக்கர வாக னத்தில் சென்றுள்ளனர். சின்ன ஆரதஅள்ளி பாலம் அருகே சுனில் குமார் மற்றும் முருகன் இருவரும் உயிரிழந்த நிலையில் கிடத்தனர். தருமபுரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெற்ற நிலையில், இறந்த இளைஞர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி &nbsp;தலைமையில் போராட்டத்தில் ஈடு பட்டனர். இந்நிலையில், இளைஞர்க ளின் உயிரிழப்பிற்கு திட்டமிட்ட ஆணவப்படுகொலை தான் கார ணம் என அவர்களின் பெற்றோர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். எனவே, காவல்துறையினர் உரிய விசா ரணை நடத்தி கொலைக்கு காரண மானவர்கள் மீது எஸ்சி/எஸ்டி வன் கொடுமை சட்டத்தின் கீழ் வழக் குப்பதிந்து கைது செய்ய வேண் டும். இளைஞர்களின் குடும்பத் திற்கு நிவாரணம் மற்றும் உரிய பாது காப்பு வழங்க வேண்டும் என வலி யுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சனியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். தருமபுரி பிஎஸ்என்எல் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் மா.குறளரசன் தலைமை வகித்தார். இதில் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் இரா.சிசுபாலன், தீண்டாமை &nbsp;ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலை வர் எம்.முத்து, மாவட்டச் செயலா ளர் ஏ.சேகர், நிர்வாகி வெள்ளியங் கிரி, மாற்றுத்திறனாளிகள் சங்க &nbsp;மாவட்டச் செயலாளர் எம்.மாரி முத்து, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் பி.கோவிந்தசாமி, நிர்வாகிகள் ரவி, சிலம்பரசன், மாணவர் சங்க மாவட்டத் தலைவர் &nbsp;அஜித் உட்பட பலர் கலந்து கொண் டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.