உணவுப் போராட்டத்தின் தியாகிகளுக்கு சிபிஎம் தலைவர்கள் அஞ்சலி
1 Sept 2026, 9:14 pm

உணவுப் போராட்டத்தின் தியாகிகளுக்கு சிபிஎம் தலைவர்கள் அஞ்சலி

கொல்கத்தாமேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சுபோத் மாலிக் சதுக்கத்தில் அமைந்துள்ள நினைவிடத்தில், வரலாற்றுச் சிறப்புமிக்க 1959ஆம் ஆண்டு உணவுப் போராட்டத்தின் தியாகிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அஞ்சலி செலுத்தியது.

இந்நிகழ்வில், சிபிஎம் மூத்த தலைவர் சூர்யகாந்த மிஸ்ரா, மேற்கு வங்க மாநிலச் செயலாளர் முகமது சலீம், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஸ்ரீதீப் பட்டாச்சார்யா மற்றும் மேற்கு வங்க இடது முன்னணியின் பிற மூத்த தலைவர்களும்பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

உணவுப் போராட்டம் - 80 பேர் படுகொலை1959ஆம் ஆண்டின் உணவுப் போராட்டம் என்பது, மேற்கு வங்கத்தில் நிலவிய கடுமையான உணவு நெருக்கடி, பசிமற்றும் விலைஉயர்வு ஆகியவற்றுக்கு எதிராக தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் மற்றும் அனைத்துப் பகுதி மக்களையும் ஒன்றிணைத்த ஒரு மாபெரும் மக்கள் திரள்இயக்கமாகும். ஆகஸ்ட் 31 அன்று (1959), உணவு மற்றும் வறுமை ஒழிப்பை வலியுறுத்தி மாநிலத்தின் பல்வேறுபகுதிகளிலிருந்து திரண்ட 3,00,000 க்கும் மேற்பட்ட மக்களால் கொல்கத்தா நகரேசிவப்புக் கடலாக மாறியது. ஜோதிபாசு மற்றும் பிற தலைவர்கள் இந்தப் போராட்டத்தின் முன்னணியில் நின்றனர். அப்போதைய காங்கிரஸ் அரசாங்கம் இதற்கு ஈவு இரக்கமற்ற அடக்குமுறையைக் கொண்டு பதிலளித்தது.

ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 4வரை நடைபெற்ற வன்முறையில் 80 பேருக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்ததுடன், பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு காவல் நிலையங்களில் மனிதத்தன்மையற்ற சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.