கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 194 புதிய மருத்துவர்கள் நியமனம்
7 Jan 2026, 4:05 pm
<p><strong>கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 194 புதிய மருத்துவர்கள் நியமனம்</strong></p>
<p>சிதம்பரம், ஜன.7- சிதம்பரம் அண்ணா மலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, இதயச் சிகிச்சை நிபு ணர்கள் உள்ளிட்ட 194 புதிய மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனை மருத்துவப் பயன் பெறுவோர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் வரவேற்றுள்ளனர். மருத்துவமனையை மேம்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய மருத்துவர்கள் அறிமுகக் கூட்டம், கல்லூரி முதல்வர் டாக்டர் சி. திருப்பதி தலைமையில் நடைபெற்றது. மருத்துவ மனையை அரசு ஏற்ற பிறகு நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து அவர் விரிவாகப் பேசி னார். இந்நிகழ்வில் கண்கா ணிப்பாளர்கள் ஜூனியர் சுந்த ரேஷ், அசோக் பாஸ்கர், பாரி, துணை முதல்வர் சசிகலா உள்ளிட்ட துறைத் தலைவர்கள் முன்னிலை வகித்தனர். சிறப்பம்சங்கள் தமிழகத்தின் பல்வேறு மருத்துவக் கல்லூரி களிலிருந்து 194 பேரா சிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்கள் இங்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர். கட்டமைப்பு வசதிகள்: ரூ. 12 கோடியில் மகப்பேறு மையக் கட்டிடம், ரூ. 18 கோடியில் விபத்து மற்றும் அவசரச் சிகிச்சைப் பிரிவு ஆகியவை பயன்பாட்டிற்கு வரவுள்ளன. இதயச் சிகிச்சை: ரூ. 7.6 கோடியில் நவீன ‘கேத் லேப்’ அமைக்கப் பட்டு வருகிறது. இருதய நிபுணர்கள் நிய மிக்கப்பட்டுள்ளதால் விரைவில் ஆஞ்சியோ கிராம் மற்றும் அறுவை சிகிச்சைகள் தொடங்கப்படும். புற்றுநோய் சிகிச்சை: ரூ. 25 கோடியில் கதிரி யக்க வீச்சு சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டு வரு கிறது; இதற்காக 6 சிறப்பு மருத்துவர்கள் நிய மிக்கப்பட்டுள்ளனர். விரைவில் நரம்பியல் மருத்துவர்கள் நிய மிக்கப்பட உள்ளனர் என்றும், ஏர்-ஆம்புலன்ஸ் சேவை தொடங்குவதற்கான வசதிகள் மருத்துவமனை வளாகத்தில் இருப்பதாக வும் முதல்வர் தெரிவித்தார். இந்த மேம்பாட்டுப் பணிகளால் டெல்டா பகுதி மக்கள் பெரும் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
