தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி நீக்க நோட்டீஸ் - 193 எம்.பி-க்கள் கையெழுத்து
13 Mar 2026, 6:51 am
<p>தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நோட்டீஸ் வழங்க எதிர்க்கட்சி எம்.பி-க்கள் திட்டமிட்டுள்ளனர்.<br />
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் குளறுபடிகள் மற்றும் ஒன்றிய பாஜக அரசுக்கு ஆதரவாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செயல்படுகிறார் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நோட்டீஸ் வழங்க எதிர்க்கட்சி எம்.பி-க்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த நோட்டீஸில் 130 மக்களவை எம்பிக்கள், 63 மாநிலங்களவை எம்.பிக்கள் என மொத்தம் 193 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.<br />
வரும் வாரத்தில் இந்த தீர்மானம் நோட்டீஸ் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.</p>
