பாகிஸ்தானுக்கு 19%, இந்தியாவுக்கு 50% வரி மோடி - டிரம்ப் நட்பு எங்கே போனது?
10 Nov 2025, 2:46 pm
<p><strong>பாகிஸ்தானுக்கு 19%, இந்தியாவுக்கு 50% வரி மோடி - டிரம்ப் நட்பு எங்கே போனது?</strong></p>
<p>சிகாகோ உலக விவகாரங்களுக்கான அமெரிக்காவின் “சிகாகோ கவுன்சில் ஆன் குளோபல் அபேர்ஸ்” நடத்திய நிகழ்வில் (சிகாகோ நகரில்) கலந்துகொண்ட இந்தியாவின் ரிசர்வ் வங்கி முன் னாள் ஆளுநரும், பொருளாதார அறிஞருமான ரகுராம் ராஜன் பேசு கையில்,”கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவும், அமெரிக்காவும் மிக நெருங்கிய உறவு கொண்ட நாடாக இருக்கின்றன. இந்த சுழலில் வரி விதிப்பு மிகவும் ஏமாற்றம் அளிக்கி றது. நான் தலைமைத்துவத்தைப் பற்றி பேசவில்லை. ஆனால் வரி விதிப்பால் பாதிக்கப்பட்ட மக்க ளைப் பற்றி பேசுகிறேன். எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்ற விரும்பவில்லை. அதேநேரம், பாகிஸ்தானுக்கு 19%, இந்தியா வுக்கு 50% வரி விதிக்கப்பட்டுள் ளது. மோடி - டிரம்ப் இடையே மிக வும் போற்றப்பட்ட நட்பு எங்கே போனது? அமெரிக்கா நம்பத் தகுந்த நாடு கிடையாது. 1971ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின்போது, போரை நிறுத்த வும் பாகிஸ்தானுக்கு உதவும் வகையிலும் கடற்படையை அமெரிக்கா அனுப்பியது. அப் போது சோவியத் யூனியன்தான் இந்தியாவுக்கு உதவியது. க்வாட் அமைப்பில் இந்தியா நல்ல உற வைக் கொண்டுள்ளது, கூட்டு ராணுவப் பயிற்சிகள் நடந்தன. ஆனால், வரி விதிப்பில் இந்தியா ஏமாற்றப்பட்டுள்ளது. அமெரிக்கா வைத் தவிர்த்து வர்த்தகம் மேற் கொள்ள இந்தியாவுக்கு மாற்று வாய்ப்புகள் இல்லை” என அவர் தெரிவித்தார்.</p>
