தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருப்பூரில் 18 ஆவது நிட் டெக் பின்னலாடை இயந்திர கண்காட்சி தொடக்கம்

7 Mar 2026, 2:36 pm
திருப்பூரில் 18 ஆவது நிட் டெக் பின்னலாடை இயந்திர கண்காட்சி தொடக்கம்
<p><strong>திருப்பூரில் 18 ஆவது நிட் டெக் பின்னலாடை இயந்திர கண்காட்சி தொடக்கம்</strong></p> <p>திருப்பூர், மார்ச் 7- திருப்பூர் அருகே உள்ள ஹைடெக் இன் டர்நேஷனல் கண்காட்சி வளாகத்தில் 18 &nbsp;ஆவது நிட் டெக் பின்னலாடை இயந்திர &nbsp;கண்காட்சி வெள்ளிக்கிழமை கோலாகல மாக தொடங்கியது. ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் தலைவர் ஏ. சக்திவேல் கண்காட்சியை திறந்து வைத்தார். ஏற்றுமதியாளர்கள் சங்கத் &nbsp;தலைவர் சுப்பிரமணியன் சிறப்பு மலரை வெளியிட்டார். இவ்விழாவில் சைமா தலை வர் சண்முக சுந்தரம், நிட்மா சங்கத் தலை வர் அகில் எஸ்.ரத்தினசாமி, சாய ஆலை உரி மையாளர்கள் சங்கத் தலைவர் காந்திரா ஜன், டிப் சங்கத் தலைவர்கள் அகில் மணி, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட தொழில்துறையினர் பலர் &nbsp;கலந்து கொண்டனர். 2 லட்சம் சதுர அடியில் 360 அரங்குகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தயாரிப்பு களான புதிய தொழில்நுட்ப இயந்திரங்கள் &nbsp;முழு இயக்க நிலையில் காட்சிப்படுத்தப்பட் டுள்ளன. பின்னலாடை, சாயமேற்றுதல், காம் பாக்டிங் உள்ளிட்ட பல்வேறு வகை யான பெரிய அளவிலான இயந்திரங்களும் &nbsp;செயல்பாட்டு நிலையில் வைக்கப்பட்டுள் ளன. கண்காட்சியில் வெளிநாட்டு இயந்திரங் கள் மட்டுமின்றி, அதே தரத்திலும் தொழில் நுட்பத்திலும் மலிவு விலையில் கிடைக்கும் உள்நாட்டு இயந்திரங்களும் அதிகளவில் இடம் பெற்றுள்ளன. ஜெர்மனிக்கு இணை யான உள்நாட்டு டிஜிட்டல் பிரிண்டிங் இயந் திரங்கள், ஆய்வுக் கருவிகளுடன் கூடிய டிஜிட்டல் பிரிண்டிங் மெஷின்கள், சாயமேற் றும் இயந்திரங்கள் உள்ளிட்ட பல நவீன இயந் திரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறும் இந்த &nbsp;கண்காட்சியை தினமும் காலை 10 மணி முதல் &nbsp;மாலை 6 மணி வரை பொதுமக்கள் பார்வையி டலாம். ஹைடெக் இன்டர்நேஷனல் டிரேட் பேர் நிறுவனத்தின் தலைவர் ராயப்பன் மற் றும் சிபி சக்கரவர்த்தி ஆகியோர் இந்த கண் காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.