1798 மெட்ராஸ் பிரசிடென்சி செப்புக் காசு கண்டுபிடிப்பு! 1798 மெட்ராஸ் பிரசிடென்சி செப்புக் காசு கண்டுபிடிப்பு!
2 Dec 2025, 4:11 pm
<p><strong>1798 மெட்ராஸ் பிரசிடென்சி செப்புக் காசு கண்டுபிடிப்பு! 1798 மெட்ராஸ் பிரசிடென்சி செப்புக் காசு கண்டுபிடிப்பு!</strong></p>
<p>மெட்ராஸ் பிரசிடென்சியின் ஒரு பகுதியாக, அன்றைய சேலத்தில் (சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட் டங்கள் அடங்கிய பகுதி) அச்ச டிக்கப்பட்டதாக கருதப்படும் ஒரு அரிய செப்புக் காசு இப்போது கண்டறியப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த தமிழரிஞர் சுல்தான் இதுகுறித்து கூறுகையில், இந்த நாணயம் அச்சடிக்கப்பட்ட காலம்: 1798 ஆம் ஆண்டு (ஹிஜ்ரி 1213-க்கு ஒத்தது). உலோகம்: செப்பு. முன்புறம்: பார சீக மொழியில் பொறிக்கப்பட்ட வாசகம். இது “சர்ப் சேலம் 1213” (sarb salem 1213) அதாவது, “சேலத் தில் அச்சடிக்கப்பட்டது, ஹிஜ்ரி 1213” என்று இருக்கலாம் எனக் கரு தப்படுகிறது. மறுபுறம்: ஆங்கில எழுத்துக்களில் “U N E D A T E D E A S T I N D I A C O M P A N Y” (ஐக்கிய கிழக்கு இந்தியா கம் பெனி) என்று பொறிக்கப்பட்டுள் ளது. இந்த ஆங்கில எழுத்துக்கள் மிகவும் துல்லியமாக உள்ளது இதன் தனிச்சிறப்பாகும். சில நாணயங்களில் மலர் வடி வங்களும், அதன் மதிப்பு தமிழில் (உதாரணமாக, அனா காசு - ஐந்து காசு) போன்ற குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன. இந்த நாணயம், கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக் காலத்தில் மெட்ராஸ் பிரசிடென்சி பகுதியில் புழக்கத்தில் இருந்த ஒரு காசாகும். 1798 ஆம் ஆண்டு சேலம் அச்சகம் மீண்டும் தற்காலிகமாகச் செயல்படத் தொடங்கியபோது, இந்த குறிப்பிட்ட செப்புக் காசுகள் வெளியிடப்பட்டதாக நாணயவி யல் அறிஞர் கென் விகின்ஸ் (Ken Wiggins) போன்றோர் பதிவு செய் துள்ளனர். எனினும், இவை அதிக புழக்கத்திற்கு வரவில்லை என்று கருதப்படுகிறது. இதன் காரணமா கவே, இன்று இவை உலகின் மிக அரிய நாணயங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன. இந்த நாணயம் சேலத்தின் வர லாற்றுக்கு ஒரு நீங்காப் பெருமை சேர்க்கிறது. இது இந்தியாவின் வரலாற்றிலேயே ஒரு தனித்துவ மான நிர்வாகப் பிரிவாக இருந்தது.. இந்த நாணயம், சேலத்தில் ஒரு காலகட்டத்தில் கிழக்கிந்திய கம் பெனியால் நாணயச் சாலை (Mint) நிறுவப்பட்டு, நாணயங்கள் அச்ச டிக்கப்பட்டன என்பதற்கான உறுதி யான ஆவணமாகும். மூன்றாம் மைசூர் போருக்குப் பிறகு திப்பு சுல்தானிடம் இருந்து பெறப்பட்ட பாராமஹால் பகுதிக்குத் தேவை யான நாணயப் புழக்கத்தை நிர்வ கிக்க, கிருஷ்ணகிரி மற்றும் சேலத் தில் தற்காலிக நாணயச் சாலை கள் 1793 வாக்கில் திறக்கப்பட்டு, பின்னர் 1798-ல் மீண்டும் சேலம் அச்சகம் சில செப்பு நாணயங்களை வெளியிட்டது. நாணயவியல் துறையில், சேலம் காசுகள் மிகுந்த அரிதான வையாகும். லண்டன் அருங்காட்சி யகத்தில் இவை இடம்பெற்றிருப் பது அவற்றின் உலகளாவிய முக்கி யத்துவத்தை உறுதி செய்கிறது. இந்த நாணயங்கள் மிகக் குறை வான எண்ணிக்கையிலேயே அறி யப்பட்டுள்ளதால், இவை நாணய வியல் உலகில் “RRR” (Extremely Rare) அல்லது “RR” (Very Rare) என்ற அரிய வகைப் பட்டியலில் இடம் பெறுகின்றன. நாணயவியல் ஆய்வாளர்களான பி. ஸ்டீவன்ஸ் (P. Stevens), கென் விகின்ஸ் (Ken Wiggins) போன்றவர்களின் நூல்கள் இந்த நாணயங்களின் இருப்புக்கு சான்றளிக்கின்றன என ஆய்வாளர் தமிழறிஞர் சுல் தான் தெரிவித்தார். (ந.நி)</p>
