தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 1732 வழக்குகளுக்கு தீர்வு

15 Mar 2026, 4:11 pm
மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 1732 வழக்குகளுக்கு தீர்வு
<p><strong>மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 1732 வழக்குகளுக்கு தீர்வு</strong></p> <p>நாமக்கல், மார்ச் 15- நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதாலத்) மொத்தம் 1,732 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.18 கோடியே 11 லட்சத்து 18 ஆயிரத்து 629 தொகை வழங்க உத்தரவிடப்பட்டது. நாமக்கல், ராசிபுரம், பரமத்தி, திருச்செங்கோடு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்கள், சேந்தமங்கலம் மற்றும் குமாரபாளையம் ஆகிய நீதிமன்றங்களில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் சனியன்று நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்திற்கு. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான குருமூர்த்தி தலைமை வகித்தார். இதில் நீதிபதிகள் தயாநிதி, மகாலட்சுமி, செகனாஸ்பானு, சாந்தி, சச்சிதானந்தம், தங்கமணி ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர். சார்பு நீதிபதி வேலுமயில் மேற்பார்வை செய்தார். அதேபோல் ராசிபுரம், பரமத்தி, திருச்செங்கோடு, சேந்தமங்கலம், குமாரபாளையம் ஆகிய நீதிமன்றங்களிலும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்று பல்வேறு வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இந்த மக்கள் நீதிமன்றங்களில் சாலை விபத்து தொடர்பான வழக்குகள், காசோலை தொடர்பான வழக்குகள், குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்சம் வழக்குகள், தொழிலாளர் நலன் தொடர்பான வழக்குகள், மின்பயன்பாடு, வீட்டுவரி மற்றும் இதர பொதுப் பயன்பாட்டு வழக்குகள் உள்ளிட்டவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விரைவாக தீர்வு காணப்பட்டது. மாவட்டம் முழுவதும் 3,668 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அதில் 1,732 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மொத்தம் ரூ.18 கோடியே 11 லட்சத்து 18 ஆயிரத்து 629 தொகை வழங்க உத்தரவிடப்பட்டது. குறிப்பாக, சாலை விபத்தில் உயிரிழந்த ஆவல்நாயக்கன்பட்டியை சேர்ந்த கூரியர் நிறுவன ஊழியர் கோபி என்பவரின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சத்து 90 ஆயிரம் காப்பீட்டுத்தொகை வழங்குவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டு சமரசம் செய்து வைக்கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.