முந்தய பக்கம்

தோழர் பாப்பா உமாநாத்-தின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல்

17 Dec 2025, 4:11 pm
தோழர் பாப்பா உமாநாத்-தின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல்
<p><strong>தோழர் பாப்பா உமாநாத்-தின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல்</strong></p> <p>தருமபுரி, டிச.17- மாதர் சங்க ஸ்தாபக தலைவர்களில் ஒருவரான தோழர் பாப்பா உமாநாத்-தின் &nbsp;நினைவுதினம் புதனன்று அனுசரிக்கப் பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், அனைத்திந்திய ஜனநாயக &nbsp;மாதர் சங்கத்தின் ஸ்தாபக தலைவரு மான தோழர் பாப்பா உமாநாத்-தின் &nbsp;நினைவு தினம் புதனன்று அனுசரிக்கப் பட்டது. தருமபுரி, செங்கொடிபுரத்தில் அவரது உருவப்படத்துக்கு மாலை &nbsp;அணிவித்து மரியாதை செலுத்தப்பட் டது. இந்நிகழ்விற்கு மாதர் சங்க மாவட் டத் தலைவர் ஏ.ஜெயா தலைமை வகித் தார். இதில் மாவட்டச் செயலாளர் ஆர். மல்லிகா, முன்னாள் செயலாளர் எஸ்.கிரைஸாமேரி, ஒன்றியத் தலைவர் கே. பூபதி, செயலாளர் தமிழ்மணி, நிர்வாகி கள் சுபா, ரங்கநாயகி, மாற்றுத்திறனாளி கள் சங்க மாவட்டத் தலைவர் தமிழ் செல்வி, செயலாளர் எம்.மாரிமுத்து, விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சோ. அருச்சுனன், துணைத்தலைவர் கே.என். மல்லையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஈரோடு இதேபோன்று, சிபிஎம் ஈரோடு மாவட்டக்குழு அலுவலகத்தில் வைக்கப் பட்டிருந்த அவரின் உருவப்படத்திற்கு, கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.கோமதி, ஆர்.விஜயராகவன், எஸ். சுப்ரமணியன், சி.முருகேசன், பி.சுந்தர ராஜன், மாவட்டக்குழு உறுப்பினர் சி. ஜோதிமணி உள்ளிட்டோர் மலர்தூவி மரி யாதை செலுத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram