முந்தய பக்கம்

16 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

22 May 2026, 9:37 pm
16 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
<p><strong>16 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்</strong></p><p>சென்னை, மே 22- 16 ஐஏஎஸ் அதிகாரி களை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை செயலாள ராக சந்தியா வேணுகோபால் சர்மாவும், சென்னை மாநக ராட்சி முன்னாள் ஆணை யர் குமரகுருபரன், வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். சுற்றுலா, கலாச்சாரத் துறை செயலாளராக ஸ்வர்ணா, தொழில், முத லீட்டுத்துறை சிறப்புச் செய லாளராக சந்தீப் நந்துரி, பேரிடர் மேலாண்மை, வரு வாய் நிர்வாக ஆணையராக பிரகாஷ், ஜவுளித்துறை ஆணையராக சோபனா, தொழிலாளர் நலத்துறை ஆணையராக ஷில்பா பிர பாகர் சதீஷ் ஆகியோரும், நகர திட்ட ஆணையராக கிரண் குர்லா, மீன்வளத் துறை இயக்குநராக விஜய கார்த்திகேயன், சமூக நலத் துறை இயக்குநராக மகேஷ்வரி ரவிக்குமார், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநராக செந்தில் ராஜ், போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணை யராக பாஸ்கர பாண்டியன் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கருவூலத்துறை இயக்கு நராக சாருஸ்ரீ, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக ரவி குமார், சுற்றுச்சூழல், கால நிலை மாற்றத் துறை இயக்குநராக ஆஷா அஜித், நில அளவை மற்றும் குடி யமர்வு இயக்குநராக கிறிஸ்துராஜ், டிட்கோ முதன்மை செயலாளராக கார்த்திகேயன், பசுமை எரிசக்திக் கழக நிர்வாக இயக்குநராக வினய், தேசிய சுகாதார இயக்கத் தின் இயக்குநராக அனீஷ் சேகர், ஊரக வளர்ச்சி திட்ட தலைமை செயல் அதிகாரி யாக சஜீவனா, சிப்காட் நிர்வாக இயக்குநராக ராமன், சேலம் மாநகராட்சி ஆணையராக லலிதியா நீலம் ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram