16 கூட்டு மருந்துகளுக்கு உடனடித் தடை
20 Jun 2026, 10:08 pm

16 கூட்டு மருந்துகளுக்கு உடனடித் தடை

புதுதில்லி இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 16 நிலையான டோஸ் சேர்க்கை (Fixed Dose Combination - FDC) மருந்துகளு க்கு ஒன்றிய அரசு உடனடி தடை விதித்துள்ளது. இந்த மருந்துகள் மருத்துவ ரீதியாகத் தேவையற்றவை என்றும், பொதுமக்களின் சுகாதா ரத்திற்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியவை என்றும் அறிவியல் பூர்வ ஆய்வில் தெரிய வந்ததை அடுத்து, ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் இந்த உத்தரவைப் பிறப் பித்துள்ளது. மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தின் (Drugs and Cosmetics Act) பிரிவு 26A-இன் கீழ், இந்த மருந்துகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகத்திற்கு நாடு தழுவிய அளவில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆய்வு

இந்திய மருந்துச் சந்தையை மறுஆய்வு செய்ய வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்த ரவைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் வழிகாட்டு தலின்படி, மருந்துகள் தொழில்நுட்ப ஆலோச னைக் குழு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மருந்துச் சேர்க்கைகளை முற்றிலுமாக நீக்குவதற்காக ஒரு நிபுணர் குழுவை அமைத்தது. இந்தக் குழு மருத்துவத் தரவுகளை முழுமையாக ஆய்வு செய்ததில், இந்த 16 குறிப்பிட்ட கூட்டு மருந்து களும் நோயாளிகளுக்கு எந்தவொரு உண்மை யான மருத்துவப் பலனையும் அளிப்பதில்லை என்று முடிவு செய்து, அவற்றிற்கு உடனடித் தடை விதிக்கப் பரிந்துரைத்தது.

மருந்துகளின் விபரம்

தடை செய்யப்பட்டுள்ள மருந்துச் சேர்க்கை கள் தோல் பராமரிப்புப் பொருட்கள், வலி நிவார ணிகள், வயிற்றுப் பிடிப்புக்கான மருந்துகள், சர்க்கரை நோய் மருந்துகள் மற்றும் ஆன்டிப யாடிக் (உயிர் எதிர்ப்பி) சார்ந்த தயாரிப்புகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பிரிவுகளைச் சேர்ந்தவையாகும். குறிப்பாக, அமோக்ஸிசிலின் மற்றும் செர்ரேட்டி யோபெப்டிடேஸ் (amoxicillin + serratiopep tidase), செஃபுராக்ஸைம் மற்றும் செர்ரேட்டியோ பெப்டிடேஸ் (cefuroxime + serratiopeptidase), செஃபாடிராக்சில் மற்றும் புரோபெனெசிட் (cefadroxyl + probenecid) ஆகிய சேர்க்கை களும், டைசைக்ளோமைன் மற்றும் பாராசிட்டமால் (dicyclomine + paracetamol) போன்ற இதர வீரியமிக்கப் பொருட்களைக் கொண்ட சில மருந்து களும் தடை செய்யப்பட்டுள்ளன. இவற்றுடன், கற்றாழை (Aloe vera) சார்ந்த சில தோல் பராமரிப்பு மருந்துச் சேர்க்கைகளும் இந்தத் தடைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.