முந்தய பக்கம்

திருவண்ணாமலை மாவட்டம்: 8 தொகுதிகளில் 156 பேர் போட்டி

11 Apr 2026, 5:30 am
திருவண்ணாமலை மாவட்டம்: 8 தொகுதிகளில் 156 பேர் போட்டி

திருவண்ணாமலை மாவட்டம்: 8 தொகுதிகளில் 156 பேர் போட்டி

திருவண்ணாமலை, ஏப்.10- திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் களம் தற்போது இறுதி வடிவம் பெற்றுள்ளது. வேட்புமனுத் தாக்கல் மற்றும் பரிசீலனைக்குப் பிறகு, மாவட்டம் முழுவதும் மொத்தம் 156 வேட்பாளர்கள் மக்கள் மன்றத்தில் தங்களின் மக்கள் ஆதரவை பரீட்சை செய்யக் காத்திருக்கின்றனர்.

தொகுதி வாரியாகப் பார்த்தால், திருவண்ணாமலை தொகுதியில் அதிகபட்சமாக 30 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதனைத் தொடர்ந்து ஆரணியில் 24 பேரும், கீழ்பென்னாத்தூரில் 23 பேரும், கலசப்பாக்கத்தில் 21 பேரும் களத்தில் உள்ளனர்.

மேலும், செங்கம் (தனி), போளூர் மற்றும் வந்தவாசி (தனி) ஆகிய தொகுதிகளில் தலா 15 வேட்பாளர்களும், செய்யாறு தொகுதியில் மிகக் குறைவாக 13 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். தற்போது இறுதிப் பட்டியல் தயார் நிலையில் உள்ளதால், அரசியல் கட்சிகளும் சுயேச்சை வேட்பாளர்களும் தங்களின் பிரச்சார வியூகங்களை வகுத்து, தேர்தல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram