முந்தய பக்கம்

உக்கடத்தில் 154 கிலோவாட் மிதக்கும் சூரிய மின் நிலையம்

26 Nov 2025, 4:29 pm
உக்கடத்தில் 154 கிலோவாட் மிதக்கும் சூரிய மின் நிலையம்
<p><strong>உக்கடத்தில் 154 கிலோவாட் மிதக்கும் சூரிய மின் நிலையம்</strong></p> <p>கோவை, நவ.26- உக்கடம், பெரியகுளத்தில் ரூ.1.45 கோடி யில் 154 கிலோவாட் மிதக்கும் சூரிய மின் &nbsp;நிலையத்தின் பணிகள் துவக்கி வைக்கப் பட்டுள்ளது. கோவை மாநகராட்சிக்குட்பட்ட உக்க டம் பெரியகுளத்தின் தென்கரையில், நமக்கு &nbsp;நாமே திட்டத்தின் கீழ், ரூ.1.45 கோடி செல வில் அமைக்கப்பட்ட 154 கிலோவாட் திறன் &nbsp;கொண்ட மிதக்கும் சூரிய மின் நிலையத் தின் பணிகளை புதனன்று நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ப. ராஜ்குமார் துவக்கி &nbsp;வைத்தார். மாநகராட்சி மேயர் கா.ரங்கநா யகி, ஆணையர் சிவகுருபிரபாகரன் ஆகி யோர் முன்னிலையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் துணை மேயர் ரா.வெற்றிசெல் வன், மின்வாரிய தலைமைப் பொறியாளர் சுரேஷ்குமார், மாமன்ற உறுப்பினர்கள், அலு வலர்கள் கலந்து கொண்டனர். 13.7 சென்ட் &nbsp;நீர்ப்பரப்பில் அமைக்கப்பட்ட இந்த நிலை யத்தில், 280 சோலார் பேனல்கள் பொருத்தப் பட்டுள்ளன. இவை தினசரி சராசரியாக 693 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. தானியங்கி பேனல் சுத்தம் செய் யும் நீர்த்தெளிப்பான், கண்காணிப்பு கேமரா, &nbsp;இடி தாங்கி, தீயணைப்பு கருவிகள், வானி லை அளவீட்டு கருவி, பாதுகாப்பு வேலி ஆகிய வசதிகளுடன் இந்நிலையம் உரு வாக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram