மின்னல் தாக்கி 15 செம்மறி ஆடுகள் உயிரிழப்பு
25 May 2026, 1:33 am
<p><strong>மின்னல் தாக்கி 15 செம்மறி ஆடுகள் உயிரிழப்பு</strong></p><p>சேலம், மே 24- ஓமலூர் அருகே மின்னல் தாக்கி 15 செம்மறி ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள வேப் பிலை ஊராட்சி, செக்காரப்பட்டி பகுதியை சேர்ந்த மாதையன் (50) என்பவர், தனது தோட்டத்தில் 30க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார். இந் நிலையில், இரவு நேரத்தில் தோட்டத்தில் கட்டப்பட்டி ருந்த ஆடுகள் மீது திடீரென மின்னல் தாக்கியதில் 15 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந் தன. இதுகுறித்து தகவலறிந்த கால்நடைத்துறை அதி காரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற் கொண்டனர். பின்னர் இறந்த ஆடுகளுக்கு உடற் கூறாய்வு செய்யப்பட்டு, அவை பாதுகாப்பாக புதைக் கப்பட்டன. இதற்கிடையில், குண்டுகல் மற்றும் ஒலக் கூர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்த தால் 500-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந் தன. மேலும் காடையாம்பட்டி, செம்மாண்டப்பட்டி, பெரியப்பட்டி, தளவாய்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் 30-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் உடைந்து விழுந்தன. சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக் கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் தீவிரமாக ஈடு பட்டு வருகின்றனர். கனமழை மற்றும் பலத்த காற்றால் ஏற்பட்ட சேதம் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற் படுத்தியுள்ளது.</p>
