சென்னை உயர்நீதிமன்றத்தில் 15 புதிய நீதிபதிகள் பதவியேற்பு நீதிபதிகளின் எண்ணிக்கை 66 ஆக உயர்வு
9 Aug 2026, 8:37 pm

சென்னை உயர்நீதிமன்றத்தில் 15 புதிய நீதிபதிகள் பதவியேற்பு நீதிபதிகளின் எண்ணிக்கை 66 ஆக உயர்வு

சென்னை, ஆக. 9-சென்னை உயர் நீதிமன்றத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்ட 15 நீதிபதிகளுக்கான பதவியேற்பு விழா ஆகஸ்ட் 9 ஞாயிறன்று வளாகத்தில் உள்ள கூட்டஅரங்கில் நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி (எஸ்.ஏ. தர்மாதிகாரி) புதியநீதிபதிகள் 15 பேருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதற்கு முன்னர் கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர்மாதம் ஒரே கட்டமாக 15 நீதிபதிகளுக்கு அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் பதவிப் பிரமாணம்செய்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

பதியேற்ற புதிய நீதிபதிகள்

இவ்விழாவில் புதிய நீதிபதிகளாக கிருஷ்ணசாமி கோவிந்தராஜன், ரஜினிஷ் பத்தியில், நடராஜன் ரமேஷ்,முத்துக்குமார், ராமகிருஷ்ணன் ராஜேஷ் விவேகானந்தன், சங்கர நாராயணன் ரவிகுமார், நாகராஜன் திலிப்குமார்,எல்லப்பன் மனோகரன், டாக்டர் பி. முருகன், எம்.டி. சுமதி, எஸ். அல்லி, திருமகள் சந்திரசேகர், சண்முகம்கார்த்திகேயன், பாலுசாமி முருகேசன் மற்றும் எம். குணசேகரன் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.

காலிப் பணியிடங்கள் குறைவு

சென்னை உயர் நீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 75 ஆகும். இந்த புதிய நியமனங்களுக்கு முன்பு பல காலிப் பணியிடங்கள் இருந்து வந்த நிலையில், தற்போதுபுதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்றுள்ளதன் மூலம் உயர் நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 9 ஆகக் குறைந்துள்ளது.

பதவியேற்பு விழாவில் புதிய நீதிபதிகளை வரவேற்று அட்வகேட் ஜெனரல் விஜயநாராயணன், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால்கனராஜ்,சென்னை பார்அசோசியேஷன் தலைவர் கமல்நாதன், பெண் வழக்கறிஞர் சங்கத் தலைவர் ரேவதி மற்றும் லா அசோசியேஷன்தலைவர் செல்வராஜ் ஆகியோர் உரையாற்றினர்.