மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் 145வது சாதி மறுப்பு திருமணம்
20 Nov 2025, 3:46 pm
<p><strong>மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் 145வது சாதி மறுப்பு திருமணம்</strong></p>
<p>கிருஷ்ணகிரி, நவ.20- கிருஷ்ணகிரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வியாழன்று சாதி மறுப்புத் திருமணம் நடைபெற்றது. மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.பத்ரி மற்றும் மாவட்டச் செயலாளர் சி.சுரேஷ் தலைமையில் நடைபெற்ற இந்தத் திருமணத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் ஆனந்த குமார் மற்றும் செயலாளர் முரளி ஆகி யோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாநிலக் குழு சில மாதங்களுக்கு முன்பு அளித்த ஆதரவைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் கட்சியின் பல மாவட்ட அலுவலகங்களில் சாதி மறுப்புத் திரு மணங்கள் நடைபெற்று வரும் நிலையில், இது 145 ஆவது சாதி மறுப்புத் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. கதந்திக்குப்பத்தைச் சேர்ந்த பட்டி யல், மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த இராம மூர்த்தி - சாந்தா தம்பதியின் மகன் ஆர்.லோகேஷ்வரன் என்பவருக்கும், பாண்டிச்சேரியைச் சேர்ந்த கனகராஜ் - ரீட்டா தம்பதியின் மகள் கே.கரோலின் என்பவருக்கும் கட்சி அலுவலகத்தில் திருமணம் நடைபெற்றது. மணமக்களை வாழ்த்திப் பேசிய தலைவர்கள், சாதி மறுப்புத் திருமணங்களுக்கு ஆதரவு அளித்து இதுபோன்ற நிகழ்வுகளைக் கட்சி அலுவலகங்களில் நடத்திக் கொள்ள மாநிலக் குழு முன்பு அனுமதி அளித்தி ருந்தது குறித்து எடுத்துரைத்தனர். இந்த முற்போக்கு திருமணத்தில் செயற்குழு உறுப்பினர்களான ஆர்.சேகர், ஜி.கே. நஞ்சுண்டன், மகாலிங்கம், சி.பி.ஜெயராமன், நடராஜன், நாகராஜ் ரெட்டி, லெனின் முருகன், பிரகாஷ், ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, ஸ்ரீதர்,இடைக்கமிட்டிச் செயலாளர்களான பெரியசாமி தேவராஜ், சபாபதி, ஆர்.கே. தேவராஜ், நாகேஷ்பாபு ராஜா, முருகன், மாவட்டக் குழு உறுப்பி னர்களான ராஜா, அனுமப்பா, டி.எஸ்.பாண்டியன், புருஷோத்தம ரெட்டி, டி.எம்.ராதா ஆகியோரும் கலந்துகொண்டு மண மக்களை வாழ்த்தினர். மேலும், திரு மணத்திற்கு உறுதுணையாய் நின்ற மணமக்களின் நண்பர்களான சதீஷ், தாரணி, பார்த்திபன், தாமரைச்செல்வன், தாரணி உள்ளிட்டோரும் இதில் கலந்து கொண்டனர்.</p>
