முந்தய பக்கம்

மாமேதை மார்க்ஸின் 143 ஆவது நினைவு தினம் அனுசரிப்பு

14 Mar 2026, 2:57 pm
மாமேதை மார்க்ஸின் 143 ஆவது நினைவு தினம் அனுசரிப்பு
<p><strong>மாமேதை மார்க்ஸின் 143 ஆவது நினைவு தினம் அனுசரிப்பு</strong></p> <p>சேலம், மார்ச் 14- உலக பாட்டாளி வர்க்கத்தை தட்டியெழுப்பிய மாமேதை காரல் மார்க்ஸின் 143 ஆவது நினைவு தினம் சனியன்று அனுசரிக்கப்பட் டது. பட்டாளி வர்க்க விடுதலைக்கு வித்திட்ட, முதலாளித்துவ உல கத்தை தற்போது வரை நடுங்க செய்யும் மாமேதை காரல் மார்க் ஸின் 143 ஆவது நினைவு தினம் சனியன்று உலகெங்கும் உள்ள &nbsp;பாட்டாளி வர்க்கத்தால் அனுசரிக் கப்பட்டது. இதன்ஒருபகுதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சேலம் மாவட்டக்குழு அலுவ லக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள, மார்க்ஸ் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தப்பட் டது. இந்நிகழ்விற்கு, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.கனக ராஜ் தலைமை வகித்தார். இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.ராஜாத்தி, என். பிரவீன்குமார், மாவட்டக்குழு உறுப் பினர்கள் உட்பட பலர் பங்கேற்ற னர். முடிவில், அலுவலக செயலா ளர் பி.சந்திரன் நன்றி கூறினார். இதே போன்று, உயிர்மெய் தமிழ்ச்சங் கம், உலகத்தமிழர் பண்பாட்டு &nbsp;இயக்கம் சார்பில் மார்க்ஸ் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத் தப்பட்டது. &nbsp;ஈரோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஈரோடு மாவட்டக்குழு அலுவ லகத்தில் நடைபெற்ற நிகழ்வில், கட்சியின் மாவட்டக்குழு உறுப்பி னர்கள் சி.ஜோதிமணி, பா.லலிதா, தாலுகா செயலாளர் என்.பாலசுப்பி ரமணி உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர். இதேபோல் ஈரோடு தாலுகா, வெண்டிபாளையம், மூலப்பாளை யம் மேற்கு, கே.துரைராஜ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மார்க்ஸின் &nbsp;உருவப்படத்திற்கு, மலர்தூவி செவ் வணக்கம் செலுத்தப்பட்டது.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram