தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வாய்ப்பு வாசல்

7 Jan 2026, 3:23 pm
வாய்ப்பு வாசல்

வாய்ப்பு வாசல்

என்சிஇஆர்டி (NCERT) - யில் 141 காலிப் பணியிடங்கள்

ஒன்றிய அரசின் கீழ் இயங்கி வரும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில்  (என்சிஇஆர்டி) ஆசிரியர் அல்லாத பணிக்கு காலியாக  உள்ள  பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. கல்வித்தகுதி: 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஏதேனும் ஒரு துறையில் பட்டயம்(Diploma)/இளநிலை பட்டம்(Degree) பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். குறிப்பு: மேலும் பாடவாரியான காலிப் பணியிடங்கள்  பற்றிய முழு விபரம் அறிய இணைய தளத்தை பார்வையிடலாம்.  தகுதி மற்றும் அனுபவம்  ஆகியவையும் பணியிடங்களுக்கு ஏற்றவாறு மாறியுள்ளன. வயது வரம்பு : குறைந்தபட்சம் 18  வயது, அதிகபட்சமாக 27 என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மேலும் உச்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி/ஓபிசி பிரிவினர்களுக்கு ஒன்றிய அரசு விதிமுறைகளின் படி தளர்ச்சி  உண்டு. தேர்வு முறை : பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்கள் எழுத்துத்  தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்வு நடைபெறும் இடம், தேர்வுத்தேதி ஆகியவை மின்னஞ்சல் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விண்ணப்பக் கட்டணம்: இதர பிரிவினர் ரூ.1,000 செலுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க லாம். எஸ்.சி / எஸ்.டி / முன்னாள் இராணுவத்தின ருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.  இந்தப் பணியிட நிரப்புதல் குறித்த காலியிடங்க ளின் எண்ணிக்கை, தேர்விற்கான விண்ணப்பம், விரி வான பாடத்திட்டம், மதிப்பெண்  விபரம் உள்ளிட்ட   கூடுதல் விபரங்கள் அறிவிக்கையில் முழுமை யாகத் தரப்பட்டுள்ளன. முழுமையான அறிவிக்கை யைப் பெற www.ncert.nic.in என்ற இணைய தளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பங்களை நிரப்பு வதற்கான கடைசித்தேதி ஜனவரி 16, 2026 ஆகும்.

டிஎன்பிஎஸ்சியில் டெக்னிக்கல் சர்வீஸ் காலியிடங்கள்(70)

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 70 காலிப் பணியிடங்கள் ஏற்பட்டுள்ளன.  இதற்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். TNPSC - Combined Technical Service Exam ஆல் நடத்தும் தேர்வு மூலம்  தகுதியானவர்கள்  பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு துறையில் இளநிலை/ முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அக்கவுண்ட்ஸ் ஆபீஸர், அசிஸ்டண்ட் டைரக்டர், அசிஸ்டண்ட் மேனேஜர், சீனியர் ஆபிசர் போன்ற பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன இதற்கு பாடவாரியான பிரிவுகளின் படி விண்ணப்பிக்க வேண்டும். விவசாயம், சட்டம், வணிகவியல் உள்ளிட்ட படிப்பைப் படித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பு வந்திருக்கிறது. வயது வரம்பு : குறைந்தபட்சம் 21 வயது, அதிகபட்சமாக 32 என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஜூலை 1, 2025 தேதியின்படி வயதுவரம்பு  நிர்ணயிக்கப்படும். மேலும் உச்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி/ஓபிசி / பிரிவினருக்கு அரசு விதிமுறைகளின் படி தளர்ச்சி உண்டு. தேர்வு முறை : டிஎன்பிஎஸ்சி-ஆல் நடத்தப்படும் தமிழ் மொழி திறன் தேர்வு மற்றும் பொது அறிவு கேள்விகள் கொண்ட தேர்வு நடத்தப்படும் . இது இத்தேர்வானது பாடப்பிரிவுகளின்படி கேள்விகள் கேட்கப்படும் . எழுத்துத் தேர்வில் பெரும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். தேர்வு நடைபெறும் தேதிகள் : தமிழ் மொழி தேர்வு: மார்ச் 7, 2026 - / முதன்மைத் தேர்வு : மார்ச் 8, 2026 விண்ணப்பக் கட்டணம்: இதர பிரிவினர்களுக்கு ரூ.200 மட்டும் செலுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி / எஸ்.டி விண்ணப்பக் கட்டணம் கிடையாது.  இந்தப் பணியிட நிரப்புதல் குறித்த காலியிடங்களின் எண்ணிக்கை, தேர்விற்கான விண்ணப்பம், விரிவான பாடத்திட்டம், மதிப்பெண் விபரம் உள்ளிட்ட கூடுதல் விபரங்கள் அறிவிக்கையில் முழுமையாகத் தரப்பட்டுள்ளன. முழுமையான அறிவிக்கையைப் பெற www.tnpsc.gov.in  என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பங் களை நிரப்புவதற்கான கடைசித்தேதி ஜனவரி 20, 2026ஆகும்.

படிப்பு,  பின்னர் வேலை

இந்திய கப்பற்படையில் முதலில் பொறியியல் மாணவராகச் சேர்ந்து, பின்னர் அதிகாரியாகவும் இணைந்து பணியாற்ற வாய்ப்பு வந்துள்ளது. இந்தப் படிப்பில் 44 இடங்கள் உள்ளன. நான்காண்டுகள் படிப்பிற்குப் பின்பாக பி.டெக் பட்டம் வழங்கப்படும். அதன்பின்னர், கப்பற்படையில் நிரந்தர  அதிகாரியாகப் பணிபுரிவதற்கான பணியாணை வழங்கப்படும்.  கல்வித்தகுதி - பன்னிரெண்டாம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதப் பாடங்களை எடுத்துப் படித்திருத்தல் அவசியமாகும். இந்தப் பாடங்களில் சராசரியாக 70 விழுக்காடு மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு - ஜனவரி 1, 2007 ஆம் தேதியில் இருந்து ஜனவரி 1, 2009 ஆம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.  பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வான ஜே.இ.இ(JEE)-2025ல் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். அந்தத்  தேர்வு உள்ளிட்ட பிற கல்விச் சான்றிதழ்களை சரிபார்த்து படிப்பில் சேர்க்கை நடைபெறும். இதுகுறித்த முழு விபரங்களுக்கு www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தைப் பார்வை யிடலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித்தேதி ஜனவரி 19, 2026 ஆகும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.