140 கிலோ கஞ்சா 2 ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 பேர் கைது
17 May 2026, 11:55 pm

140 கிலோ கஞ்சா 2 ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 பேர் கைது

அம்பத்தூர், மே 16- ஆவடி, அயப்பாக்கம் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் 6 இளைஞர் களை காவல் துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.

ஆவடி ஜெ.பி.எஸ்டேட் பகுதியில் ஆவடி காவல் துறையினர் வெள்ளிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்குள்ள வெற்றி நகரில் சந்தேகப்படும் படி வந்த 4 பேரை மடக்கி காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரி வித்தனர். இதையடுத்து காவல் துறையினர் அவர்களிடம் இருந்த பைகளை சோதனை செய்த போது, 100 கிலோ எடையுள்ள கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து 4 பேரையும் காவல் நிலை யம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் அம்பத்தூர் அருகே அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தயாளன் (21), உதய பிரசாத் (21), கோபாலகிருஷ்ணன் (21), கோபி (19 ) என்பதும், இவர்கள் ஆந்திரா மற்றும் ஒடிசா பகுதிகளில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விற்பனை செய்வதும் தெரியவந்தது.

மேலும் அவர்களிடம் இருந்து கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய 2 கார்கள், 2 இருசக்கர வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

பின்னர் 4 பேரையும் கைது செய்து, பூந்த மல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

அதேபோல் ஆவடி- அயப்பாக்கம் சாலையில் உள்ள தனியார் எரிபொருள் விற்பனை நிலையம் அருகில் அயப்பாக்கம் காவல் துறையினர் சனிக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த 2 பேரை மடங்கி சோதனை செய்தனர்.

அப்போது அவர்கள் வைத்திருந்த பைகளில் 40 கிலோ கஞ்சா மற்றும் 2,000 போதை மாத்திரைகள் இருப்பது தெரிய வந்தது.

தொடர்ந்து அவர்கள் இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசா ரணை நடத்தினர்.

அவர்கள் அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கோகுல் (21), ருகேஷ் குமார் (19) என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து கஞ்சா, போதை மாத்திரை கள், கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

பின்னர் 2 பேரையும் கைது செய்து, அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.