தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

போதையில் தகராறு: ஒரே நாளில் 14 பேர் கைது

24 May 2026, 1:04 am
போதையில் தகராறு: ஒரே நாளில் 14 பேர் கைது
<p><strong>போதையில் தகராறு: ஒரே நாளில் 14 பேர் கைது</strong></p><p>தருமபுரி, மே 23- தருமபுரி மாவட்டத்தில், பொது இடங்களில் மதுபோதையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக ஒரே நாளில் 14 பேர் கைது செய்யப்பட்டனர். தருமபுரி மாவட்டத்தில் பேருந்து நிலையம், விடுதிகள் மற்றும் பிரதான சாலைகள் உட்பட மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில், குடிபோதையில் சிலர் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்து வருவதாக காவல் நிலையங்களுக்கு புகார்கள் சென்றது. இதைத்தொடர்ந்து இரவு நேரத்தில் ரோந்துப்பணியை தீவிரப்படுத்தி, இடையூறு ஏற்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, வியாழனன்று இரவு, தருமபுரி நகர காவல் உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி தலைமையிலான போலீசார், கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். பழைய பேருந்து நிலையத்தில், தருமபுரி குப்பாகவுண்டர் தெருவை சேர்ந்த கிஷோர் பாலாஜி (20) என்பவர், போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேசிக்கொண்டிருந்தார். போலீசார் அவரை கைது செய்தனர். இதேபோல், மதிகோண்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் ரோந்துப்பணியின் போது, வெள்ளோலை அரசுப்பள்ளி அருகே போதையில் ரகளை செய்து கொண்டிருந்த அதேபகுதியை சேர்ந்த மணி (29) என்பவரை கைது செய்தனர். பாலக்கோடு காவல் உதவி ஆய்வாளர் இளமதி தலைமையிலான போலீசார் ரோந்துப் பணி மேற்கொண்ட போது, எண்டப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் இடையூறு ஏற்படுத்தியதாக ஜெயராஜ் (40), மூர்த்தி (48) ஆகியோரை கைது செய்தனர். இதேபோன்று, அதியமான்கோட்டை, ஏரியூர், பொம்மிடி, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, ஒகேனக்கல், இண்டூர், பெரும்பாலை மற்றும் காரிமங்கலம் காவல் நிலையங்களில், வியாழனன்று இரவு ஒரே நாளில் போக்குவரத்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.