திருப்பத்தூர் அருகே 13-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு
11 Jul 2026, 8:44 pm
<p><strong>திருப்பத்தூர் அருகே 13-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு</strong></p><p>சிவகங்கை, ஜூலை 11- சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே காரை யூர் புதுவளவில் 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல் வெட்டு கண்டெடுக்கப்பட் டுள்ளது. காரையூரைச் சேர்ந்த பட்டதாரி மாணவர் சுரேஷ் அளித்த தகவலின் பேரில், சிவகங்கை தொல்நடைக் குழுவினர் மற்றும் காரைக் குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை யினர் களஆய்வு மேற் கொண்டனர். இரண்டு அடி நீளமுள்ள கல்வெட்டில் ஏழு வரிகள் பொறிக்கப்பட்டுள்ளன. எழுத்து வடிவத்தின் அடிப் படையில் இது 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்த னர். கல்வெட்டில் “வண் ணக்க நல்லூர்” என்ற ஊர்ப் பெயரும், வேதநெறியைப் போதித்த வைணவ ஆச்சா ரியர் குறித்து குறிப்பிடப்பட் டுள்ளதாக அவர்கள் விளக் கினர். மேலும், காரையூர் அழ கிய மணவாளப் பெருமாள் கோவிலின் பிற கல்வெட்டு களிலும் வண்ணக்க நல்லூர் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளதால், தற்போ தைய வண்ணிக் கண்மாய் பகுதியே அக்காலத்தில் வண்ணக்க நல்லூர் என அழைக்கப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரி வித்தனர். கல்வெட்டு அருகே உள்ள வன்னிகுன்னி அய்ய னார் கோவிலில் காணப் படும் அய்யனார் சிற்பமும் 12 அல்லது 13-ஆம் நூற் றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் அவர் கள் தெரிவித்தனர்.</p>
