தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிவகங்கை அருகே 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய ‘ஆசிரியம்’ கல்வெட்டு கண்டுபிடிப்பு

1 Jun 2026, 10:37 pm
சிவகங்கை அருகே 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய ‘ஆசிரியம்’ கல்வெட்டு கண்டுபிடிப்பு
<p><strong>சிவகங்கை அருகே 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய ‘ஆசிரியம்’ கல்வெட்டு கண்டுபிடிப்பு</strong></p><p>சிவகங்கை, ஜூன் 1- சிவகங்கை அருகே உள்ள சோழபுரம் கிராமத்தில் 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய வகை ஆசிரியம் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு தமிழக வரலாறு மற்றும் கல்வெட்டு ஆய்வில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சோழபுரத்தைச் சேர்ந்த பாலசுந்தரம் என்பவர், எட்டிச்சேரிக் கண்மாயில் வித்தி யாசமான கல் ஒன்று இருப்பதாக சிவ கங்கை தொல்நடைக் குழுவினருக்கு தக வல் அளித்தார். இதையடுத்து அங்கு கள ஆய்வு மேற்கொண்ட குழுவினர் கல் வெட்டினை அடையாளம் கண்டனர். எட்டிச்சேரிக் கண்மாயின் நடுப்பகுதி யில் உள்ள குமிழித் தூண் அருகே காணப்படும் இந்த கல்வெட்டு சுமார் 3 அடி உயரமும், ஒண்ணேகால் அடி அகலமும் கொண்டதாகும். கல்வெட்டின் மேற்பகுதி யில் ஒற்றைக் காலை தூக்கிய நிலையில் புலி உருவம் புடைப்புச் சிற்பமாக செதுக் கப்பட்டுள்ளது. மேலும், “ஸ்வஸ்தி ஸ்ரீ” என்ற மங்கல வார்த்தையுடன் கல்வெட்டு தொடங்குகிறது. அதன் இறுதியில் வில், அம்பு மற்றும் இரண்டு குத்துவிளக்குகள் மங்கலச் சின்னங்களாக பொறிக்கப் பட்டுள்ளன. கல்வெட்டின் வாசகங்களின்படி, “எட்டி” என்ற வணிகர் பட்டத்தை கொண்ட எரியன் என்பவர், செயங்கொண்ட சோழ புரம் என அழைக்கப்பட்ட இந்த ஊரில் புலி யைக் கொன்று மக்களைக் காத்த வீர ருக்காக ஆசிரியம் வழங்கியதை பதிவு செய்துள்ளது. ஆய்வாளர்களின் கருத்துப்படி, வணிகக் குழுவினருடன் வந்த வீரர் ஒருவர் புலியுடன் போரிட்டு அதைக் கொன்று, தாமும் உயிரிழந்திருக்கலாம். அவரது வீரத்தைப் போற்றும் வகையில் அவரு டைய குடும்பத்தினரை பாதுகாக்கும் நோக் கில் இந்தக் கண்மாய் அமைக்கப்பட்டி ருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இன்றும் இந்த நீர்நிலை “எட்டிச் சேரிக் கண்மாய்” என்ற பெயரிலேயே அழைக்கப் படுவது குறிப்பிடத்தக்கது. மேலும், இவ்வூ ரில் காணப்படும் மாறவர்மன் சுந்தர பாண்டியன் கால கல்வெட்டில் இந்த ஊர் “முடிகொண்ட சோழபுரம்” என குறிப்பி டப்பட்டுள்ள நிலையில், புதிய கல்வெட்டில் “செயங்கொண்ட சோழபுரம்” என குறிப்பி டப்பட்டிருப்பது வரலாற்று ஆய்வுக்கு புதிய தகவல்களை வழங்குகிறது. இந்த தகவல்களை சிவகங்கை தொல் நடைக் குழு நிறுவனர் புலவர் காளிராசா மற்றும் அவரது குழுவினர் தெரிவித்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.