தீக்கதிருக்கு 1368 சந்தாக்கள் திருப்பூரில் எம்.ஏ.பேபியிடம் அளிப்பு
24 Nov 2025, 3:26 pm
<p><strong>தீக்கதிருக்கு 1368 சந்தாக்கள் திருப்பூரில் எம்.ஏ.பேபியிடம் அளிப்பு</strong></p>
<p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு சார்பில் மாபெரும் நவம்பர் புரட்சி தின செந்தொண்டர் அணி வகுப்பு - பொதுக்கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவரிடம் தீக்கதிர் நாளிதழுக்கான 1288 ஆண்டு சந்தா மற்றும் 80 அரையாண்டு சந்தா என மொத்தம் 1368 சந்தாக்களுக்கான தொகை ரூ.30 லட்சத்து 58 ஆயிரத்து 400-யை மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி வழங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துகண்ணன், மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.காமராஜ், தௌ.சம்சீர் அகமது, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்கராஜ், தெற்கு மாநகர செயலாளர் த.ஜெயபால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.</p>
