முந்தய பக்கம்

உ.பி.,யில் கோர விபத்து 13 பேர் பலி

16 Dec 2025, 3:51 pm
உ.பி.,யில் கோர விபத்து 13 பேர் பலி
<p><strong>உ.பி.,யில் கோர விபத்து 13 பேர் பலி</strong></p> <p>வடமாநிலங்களில் நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகன ஓட்டிகள் பயணித்து வருகின்றனர். இருப்பினும் சில சமயங்களில் விபத்துகளும் நடைபெறுகின்றன. இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4:30 மணியளவில் 7 பேருந்து கள் மற்றும் 3 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது. அடர்ந்த மூடுபனி காரணமாக வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி தீப்பிடித்து எரிந்தன. &nbsp;தகவல் கிடைத்ததும் நிகழ்விடத்தில் தீயணைப்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 13 பேர் &nbsp;தீயில் கருகி மோதல் விபத்தில் சிக்கி உயிரி ழந்தனர். மேலும் 35 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் அருகி லிருந்த மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram