120 ஆண்டுகள் பழமையான ஒரப்பம் சந்தை நிலம் ஆக்கிரமிப்பு! போராடும் மக்களுக்கு சிபிஎம் ஆதரவு
24 Mar 2026, 3:23 pm
<p><strong>120 ஆண்டுகள் பழமையான ஒரப்பம் சந்தை நிலம் ஆக்கிரமிப்பு! போராடும் மக்களுக்கு சிபிஎம் ஆதரவு</strong></p>
<p>கிருஷ்ணகிரி, மார்ச் 24- கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வட்டம், கந்திகுப்பம் அடுத்த ஒரப்பம் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள புதன் சந்தை, பிரிட்டிஷ் ஆட்சிக் காலம் முதல் சுமார் 120 ஆண்டுகளாக நடைபெற்று வரும் வர லாற்றுச் சிறப்புமிக்க பழமையான சந்தையா கும். ஆடு, மாடு மற்றும் கோழிகள் விற்ப னைக்கு பெயர்பெற்ற இந்தச் சந்தையில், பண்டிகை காலங்களில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறுவது வழக்கம். போலி பட்டா சர்ச்சை இந்நிலையில், இந்தச் சந்தைக்குச் சொந்தமான சுமார் 90 சென்ட் நிலத்தை, சில மாதங்களுக்கு முன்பு அரசு அதிகாரி கள் சில தனிநபருக்கு போலி பட்டா வழங்கி யிருப்பது தெரியவந்துள்ளது. இந்த நில ஆக்கிரமிப்பால் சிறு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் சந்தையில் வியாபாரம் செய்ய முடியாமல் தடுக்கப்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த மாதம் பர்கூர் வட்ட சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சந்தை நிலத்தை அரசு மீட்க வேண்டும், போலி பட்டா வழங்கிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்போது வலியுறுத்தப்பட்டது. இருப்பி னும், அதிகாரிகள் தரப்பில் இதுவரை எந்த வொரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிகாரிகளின் மெத்தனப் போக்கைக் கண்டித்து, ஒரப்பம் பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தற்போது போராட் டத்தைக் கையில் எடுத்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக வி.ஏ.ஓ அலுவலகம், சந்தை வளா கம் மற்றும் கிராமப் பகுதிகளில் கருப்புக் கொடிகள் கட்டப்பட்டுள்ளன. மக்களே வழங்கிய தேர்தல் நிதி இந்நிலையில், கட்சி நிர்வாகிகள் தேர்தல் நிதிக்காக அப்பகுதிக்குச் சென்ற போது, சந்தை நிலத்தை மீட்கத் தொடர்ந்து போராடி வரும் அக்கட்சி யின் செயல்பாட்டைப் பாராட்டி, மக்கள் தாமாக முன்வந்து 5,000 ரூபாயை நிதியாக வழங்கினர். வட்டச் செயலாளர் சீனிவாசன் மற்றும் பொறுப்பாளர் ஜேம்ஸ் ஆஞ்சல மேரி உள்ளிட்டோர் இந்த நிதியைப் பெற்றுக் கொண்டனர். தங்களது வாழ்வாதாரமான சந்தையை மீட்கும் வரை போராட்டத்தைத் தொடரப்போவதாக ஒரப்பம் பகுதி மக்கள் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.</p>
