முந்தய பக்கம்

கதண்டு வண்டு கொட்டி 12 தொழிலாளர்கள் காயம்

2 hours before
கதண்டு வண்டு கொட்டி 12 தொழிலாளர்கள் காயம்

கதண்டு வண்டு கொட்டி 12 தொழிலாளர்கள் காயம்

கடலூர், அக்.14-கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த மாளிகைமேடு ஊராட்சியில் உள்ள காளியம்மன் வாய்க்காலில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் புதன்கிழமை 100 நாள் வேலைத் திட்டத்தின்கீழ் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது முள் புதர்களை அகற்றியபோது, அங்கிருந்த கதண்டு வண்டுகள் கூட்டமாகப் பறந்து வந்து தொழிலாளர்களைக் கொட்டின. இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.

இதில் அலமேலு, கௌசல்யா, சுகந்தி, செல்வி, பூரணி, செல்வம் உள்ளிட்ட 12 பேர் காயமடைந்தனர். அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram