தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி முக்கிய செய்திகள்

10 Jan 2026, 2:48 pm
திருச்சி முக்கிய செய்திகள்

கதண்டு கடித்து 12 பேர்  மருத்துவமனையில் அனுமதி

தஞ்சாவூர், ஜன.10-   தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே, கதண்டு கடித்த 12 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  பேராவூரணி ஒன்றியம், பழையநகரம் ஊராட்சி, சீவன்குறிச்சி கிராமத்தில் சாலையோரம் உள்ள மாமரம் ஒன்றில் விஷவண்டான, கதண்டு கூடு இருந்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை வீசிய காற்றில் மரத்திலிருந்து கீழே விழுந்த கூட்டிலிருந்த விஷ வண்டுகள், தெருக்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் பறந்து சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மற்றும் வீட்டிலிருந்தவர்களை கடித்தது.  இதில், 12 பேர் பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சரக்கு ஆட்டோவில்  ரேசன் அரிசி கடத்தியவர் கைது:  வாகனம் பறிமுதல்

தஞ்சாவூர், ஜன.10-  தஞ்சை மாவட்டம் திருவோணம் மற்றும் பட்டுக்கோட்டை பகுதிகளில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக, தஞ்சை மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய் பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு ஆய்வாளர் ஜெகதீசன், உதவி ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். திருவோணம் 3 ரோடு சந்திப்பு பகுதியில், தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை மறித்து சோதனை செய்தனர். அப்போது, அதில் ரேசன் அரிசி கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். அதில் 50 கிலோ எடை கொண்ட 13 மூட்டைகளில் 650 கிலோ ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது. அரிசி மூட்டைகளையும், அதனை கடத்தி வந்த தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்த நரங்கியன்பட்டு பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன்(48) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திருவோணம், மேட்டுப்பட்டி, தோப்பு விடுதி உள்ளிட்ட பகுதிகளில் ரேசன் அரிசி குறைந்த விலைக்கு வாங்கி, இட்லி மாவு அரைத்து விற்பனைக்கு பயன்படுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட பாலசுப்ரமணியனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வில் பொறி செயல்விளக்கம்

பாபநாசம், ஜன.10-  ஈச்சங்கோட்டை டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்கள் ஊரக வேளாண் பணி அனுபவம் பெறும் திட்டத்தின் கீழ், சாலியமங்கலம் அருகே, கத்தரி நத்தத்தில் தஞ்சாவூர் வில் பொறி பற்றிய செயல் விளக்கம் அளித்தனர்.  அப்பகுதியைச் சேர்ந்த நெல் விவசாயிகளுக்கு, எலிகளால் ஏற்படும் பாதிப்பு, அதை கட்டுப்படுத்தும் வழிமுறையை விளக்கினர். அப்பகுதி நெல் விவசாயிகளுக்கு எலி தொல்லை அதிகமாக இருப்பதால், மாணவர்கள் தாங்கள் தயாரித்த தஞ்சாவூர் வில் பொறியை வழங்கினர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.