முந்தய பக்கம்

ஈரோட்டில் புதிதாக 12 கிராம ஊராட்சிகள் உருவாக்கம்

11 Dec 2025, 5:47 pm
ஈரோட்டில் புதிதாக 12 கிராம ஊராட்சிகள் உருவாக்கம்

ஈரோட்டில் புதிதாக 12 கிராம ஊராட்சிகள் உருவாக்கம்

ஈரோடு, டிச.11- ஈரோடு மாவட்டத்தில் மலைப் பகுதியில் உள்ள 3 கிராம ஊராட்சிகள் பிரிக்கப்பட்டு 12 புதிய கிராம ஊராட்சிகளை உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் மக்கள் தொகை அதிகம் உள்ள 3 கிராம ஊராட்சிகளை பிரித்து புதிய கிராம ஊராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பர்கூர் ஊராட்சி பிரிக்கப்பட்டு, பர்கூர், குட்டையூர், தாமரைக்கரை, தேவர்மலை, கோவில்நத்தம் ஆகிய 5 புதிய ஊராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதேபோல சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கடம்பூர் மலைப்பகுதி, குத்தியாலத்தூர் ஊராட்சி பிரிக்கப்பட்டு, கடம்பூர், பவளக்குட்டை, இருட்டிபாளையம், கரளயம், அரிகியம் ஆகிய ஊராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதுபோல தாளவாடி ஊராட்சி ஒன்றியம், தாளவாடி ஊராட்சி பிரிக்கப்பட்டு தாளவாடி, தொட்டகாஜனூர் ஆகிய ஊராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. குத்தியாலத்தூர் ஊராட்சியில் 48 குக்கிராமங்களும், பர்கூர் ஊராட்சியில் 34 குக்கிராமங்களும், தாளவாடி ஊராட்சியில் 12 குக்கிராமங்களும் இருந்தன. இந்த 3 ஊராட்சிகளிலும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிகள் பிரிக்கப்பட்டு 12 ஊராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதன் மூலம், அரசு திட்டங்களை எளிதில் பெற முடியும். ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது இந்த ஊராட்சிகளுக்கு தனித்தனியாக வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இந்த ஊராட்சிகளுக்கு தனித்தனியாக ஊராட்சி அலுவலகம் கட்டவும், ஊராட்சி செயலர்கள் நியமிக்கவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram