தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க தேவைப்படும் 12 ஆவணங்கள்

21 Dec 2025, 3:21 pm
நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க தேவைப்படும் 12 ஆவணங்கள்
<p><strong>நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க தேவைப்படும் 12 ஆவணங்கள்</strong></p> <p>சென்னை, டிச.21- சிறப்பு தீவிர திருத்தத் தின் மூலம் நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர் களை மீண்டும் சேர்க்க தேவைப்படும் 12 ஆவ ணங்கள் குறித்து தகவல் தெரியவந்துள்ளது. வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) மேற்கொள்ளப் பட்ட நிலையில், தமிழ கத்தில் 97 லட்சம் வாக்கா ளர்கள் நீக்கப்பட்டனர். அனைத்து மாவட்டங்களி லும் வரைவு வாக்காளர் பட்டி யல் வெள்ளிக்கிழமை வெளி யிடப்பட்டு, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்களின் பார்வைக் காக வைக்கப்பட்டுள்ளது. அதே போல தேர்தல் &nbsp;ஆணைய இணைய தளத்திலும் வெளியிடப்பட் டுள்ளது. இதையடுத்து பெயர் நீக்கப்பட்டவர்கள், முகவரி மாறியவர்கள் உரிய ஆதாரங்களுடன் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு சிறப்பு முகாம் மூலம் விண்ணப்பிக்கலாம். &nbsp;முகாமுக்கு செல்ல இயலாதோர் https://www.eci.gov.in/voters-services-portal என்ற இணையதளம் மற்றும் வோட்டர் ஹெல்ப்லைன் ஆப் செயலியில் விண்ணப் பிக்கலாம். 2026 ஜனவரி 1ஆம் தேதி 18 வயது பூர்த்தியடைவோர் வாக்காளர் பட்டியலில் தங்க ளது பெயரைச் சேர்க்க பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களுடன் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து கொடுக்கலாம். &nbsp;இதேபோல தொகு திக்குள் இடம் பெயர்ந்த வர்கள், தொகுதி விட்டு தொகுதி மாறி வந்தவர்களும் தங்களுடைய தற்போதைய முகவரிக்கான ஆதாரத்து டன் படிவம் 8-ஐ பூர்த்தி செய்து கொடுக்கலாம். மேலும், பெயரைச் சேர்க்க தேவையான 12 ஆவணங்கள் என்பவை, பிறப்புச் சான்றிதழ், கடவுச் சீட்டு, ஒன்றிய-மாநில அரசு பொதுத் துறை நிறு வனங்களில் பணியாற்றும் அல்லது ஓய்வூதியதாரர்கள் அடையாள அட்டை, 1987-க்கு முன்பு அரசு, உள்ளாட்சி அமைப்புகள், வங்கிகள், அஞ்சல் அலு வலகம், எஸ்ஐசி வழங்கிய ஆவணங்கள், அங்கீகரிக்கப் பட்ட கல்வி நிறுவனங்களின் பள்ளி, பல்கலைக்கழக சான்றிதழ்கள், வன உரிமை சான்றிதழ், சாதி சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் ஆகியவற்றில் ஒன்றை அளித்து பெயரைச் சேர்க்கலாம்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.