12 கூடுதல் சிறப்பு நீதிமன்றங்கள்: அமைச்சர் நிர்மல் குமார் அறிவிப்பு
21 Aug 2026, 10:02 pm

12 கூடுதல் சிறப்பு நீதிமன்றங்கள்: அமைச்சர் நிர்மல் குமார் அறிவிப்பு

சென்னை, ஆக.21 -குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிக்க செங்கல்பட்டு, கோயம்புத்தூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூர், திருநெல்வேலி ஆகிய 12 மாவட்டங்களில் கூடுதல் சிறப்பு நீதிமன்றங்களும், மதுரை மாவட்டத்தில் மேலும் இரண்டு கூடுதல் சிறப்பு நீதிமன்றங்களும் தேவையான பணியிடங்களுடன் ரூ.25.3 கோடியில் அமைக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் அறிவித்தார்.

தமிழ்நாடு சட்டப் பேரவையில் நடைபெற்ற சட்டத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், மேலும் பல புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

திருச்சி சட்டப் பல்கலைக்கழகத்தில் புதிய விடுதி

திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் கூடுதல் மாணவர் விடுதி கட்டப்பட்டு இடப்பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும். இதன் மூலம் முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் வளாகத்திலேயே தங்கி பயிலவும், எதிர்காலத்தில் அதிகரிக்கும் மாணவர் சேர்க்கைக்கு தேவையான விடுதி வசதியும் உறுதி செய்யப்படும்.

மாநில ஆலோசனை குழு அமைப்பு

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போதைப் பொருட்களை தடுப்பது ஆகியவைதொடர்பான குற்ற வழக்குகளில் விசாரணையை விரைந்து முடிப்பதற்கு அரசுக்கு ஆலோசனைகள் வழங்க மாநிலஆலோசனை குழு அமைக்கப்படும்.

சட்டத்தொகுப்பு இணைய வாசல்

தமிழ்நாட்டில் இயற்றப்பட்ட அனைத்து சட்டங்கள், அவசர சட்டங்கள், சட்டமுன் வடிவங்கள், அரசு இதழ்கள்ஆகியவற்றை பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு வசதியாக செயற்கை நுண்ணறிவு உள்ளடக்கிய “தமிழ்நாடுசட்டத்தொகுப்பு இணைய வாசல்” என்னும் மின்னணு களஞ்சியம் உருவாக்கப்படும்.புதிய எல்எல்எம் பிரிவுகள் மற்றும் விடுதி வசதிகள்சேலம், நாமக்கல், தேனி மற்றும் காரைக்குடி ஆகிய அரசு சட்டக் கல்லூரிகளில் வரும் கல்வி ஆண்டில் புதிதாகமுதுநிலை எல்எல்எம் பட்டப் பிரிவுகள் தொடங்கப்படும். மேலும், வேலூர் மற்றும் செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லூரிகளில் மாணவர் விடுதி இல்லாத நிலையை போக்க, மாணவர் தங்கும் விடுதி மற்றும் உள்கட்டமைப்புநிறுவனம் மூலம் புதிய மாணவர் விடுதி கட்டடம் கட்டப்படும்.கண்காணிப்பு கேமராக்களும் ஏஐ சட்டவியல் மையமும்சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, திருப்போரூர், புதுப்பாக்கம், மதுரை, திருச்சி, கோவை,நெல்லை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், ராமநாதபுரம், தர்மபுரி, சேலம் ஆகிய 12 சட்டக் கல்லூரிகளில்கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்படும். அத்துடன் 30 ஆயிரம் சட்ட மாணவர்களுக்கு பயன்படும் வகையில்செயற்கை நுண்ணறிவு மற்றும் சட்டவியல் மையம் ஒன்றும் உருவாக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்தார்.